ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் அழகிய கலைமான்
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் அழகிய கலைமான்
ரகசிய இதயம் பலவகை துயரம்
அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
உண்மையை சொன்னால் சன்னிதி திறக்கும்
ஒவ்வொரு மானுக்கும் நிம்மதி கிடைக்கும்
யாரரிவாரோ ஊமையின் கனவு
யாரரிவாரோ ஊமையின் கனவு
மானுக்கும் உண்டு ஒரு வகை மனது
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் அழகிய கலைமான்
பாட நினைத்தது பைரவி ராகம்
பாடி முடித்தது யாவையும் சோகம்
மானும் நினைத்தது மங்களம் பாட
மானும் நினைத்தது மங்களம் பாட
மயங்கி விழுந்தது சங்கமமாக
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் அழகிய கலைமான்
பெண்ணாய் பிறந்தால் பெதமை உள்ளம்
பேதமையாலே விளைந்தது காலம்
கண்ணா உனது கருணையை காட்டு
காரிகை வாழ்வில் நிம்மதியூட்டு
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் அழகிய கலைமான்
ரகசிய இதயம் பலவகை துயரம்
அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்