பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்
ஆண் : நம் வறுமை துயரை துடைக்கும்
ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்
நம் வறுமை துயரை துடைக்கும்
உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள்
அத்தனையும் அது உடைக்கும்
சிலர் ஆதிக்க கதை முடிக்கும்…..
ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்
நம் வறுமை துயரை துடைக்கும்
உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள்
அத்தனையும் அது உடைக்கும்
சிலர் ஆதிக்க கதை முடிக்கும்…..
ஆண் : முப்பது ஆண்டு சுதந்திர நாடு
எப்படி வந்தது வறுமைக் கோடு
ஆண் : ஏழைகள் வேர்வை எங்கே போச்சு
இன்னமும் மேடையில் சமத்துவ பேச்சு
ஆண் : அனுதினம் பட்டினியா இது
ஆண்டவன் கட்டளையா
ஆண் : அனுதினம் பட்டினியா இது
ஆண்டவன் கட்டளையா
ஆண் : வாருங்கள் தோழர்களே
பதில் கேளுங்கள் தோழர்களே……
ஆண் : வாருங்கள் தோழர்களே
பதில் கேளுங்கள் தோழர்களே……
ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்
நம் வறுமை துயரை துடைக்கும்
உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள்
அத்தனையும் அது உடைக்கும்
சிலர் ஆதிக்க கதை முடிக்கும்…..
குழு : ……………………….
ஆண் : உழுபவன் கைகளில் நிலங்களும் இல்லை
உழைப்பவர் கையில் தொழில்களும் இல்லை
ஆண் : மாளிகை அமைத்தவன் வீதியில் இங்கே
மன்னவர் நாம் எனச் சொன்னவன் எங்கே
ஆண் : கூப்பிடு பாரதியை அவன்
கூறிய ஓர் விதியை
ஆண் : கூப்பிடு பாரதியை
இனி ஒரு விடி செய்வோம்
அதை எந்த நாளும் கேப்போம்
தனி ஒருவனுக்கில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்
ஆண் : கூப்பிடு பாரதியை அவன்
கூறிய ஓர் விதியை
செய்திடும் நாள் இதுவே எனும்
சேதியை கூறுங்களேன்……..
ஆண் : செய்திடும் நாள் இதுவே எனும்
சேதியை கூறுங்களேன்……..
ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்
நம் வறுமை துயரை துடைக்கும்
உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள்
அத்தனையும் அது உடைக்கும்
சிலர் ஆதிக்க கதை முடிக்கும்…..
குழு : …………………..