சந்தான லஷ்மி வந்த நேரம் சரியான நேரம்
மங்காத ஜோதி என்றும் இங்கு நின்றாடும் கோலம்
நலுங்கொன்று சொல்ல
சொந்த பந்தம் ஒன்றாகும் நேரம்
நலம் கோடி காண
மங்கலங்கள் மனம் போலக் கூடும்..னனனனா...
ஒரு துளிர் ஒண்ணு அரும்புது
தளிர் ஒண்ணு சிரிக்குது கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒண்ணு விரியுது
மனதுக்குள் நிறையுது மாலைப் பொன் வெயிலே
இந்த வானின் மடியிலே
சிறு பிறையும் வளர்வதென்ன
இந்த அன்னை மடியிலே
தங்கக் கொடியும் வளர்வதென்ன
ஒரு வாழ்த்து பாடு இன்று குக்கூ குக்கூ கூ(ஒரு துளிர்)
குறுகுறு விழிகளில் சிறுசிறு நவமணிகள் ஆஹா
அந்த சிறுசிறு மணிகளில் குறுகுறு கவிமணிகள்
ஒரு சிறு சிரிப்பினில் புதுப்புது கதிரலைகள்
அந்த புதுப்புது கலைகளில் இணைந்தது உயிரலைகள்
கைகளில் கம்பன் பாட்டு காவியம் பாடாதோ
கால்களில் தென்றல் காற்று ஓவியம் போடாதோ
நடை போடட்டும் விளையாடட்டும்
இந்த செந்தமிழ் புதுக் கவிதை....(ஒரு துளிர்)
மணிவதன் ஏறிய மரகத வீணை இது உன்
மது முகம் தூவிய புதுமுகப் பூவும் இது
அணிகலன் அணிந்திட
அவசியம் இல்லை என ஆஹா
கொள்ளை அழகுடன் பழகிடும்
அதிசயப் பிள்ளை இது
மெல்லிய பூவுக்கெல்லாம் மென்மையைத் தந்தாயோ
சொல்லிய சொல்லுக்குள்ளே சொற்ச் சுமை ஆனாயோ
விழிக் கோலத்தில் ஒளி ஜாலத்தில்
அந்த வானுலகம் இயங்கும்......(ஒரு துளிர்)