பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ……………………………………
பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
ஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன்தான்
வாசல் தேடி வந்ததொரு
வசந்த காலம்தான்
குழு : தகுதுகு தகுதுகு தகுதுகு
தகுதுகு தூ
பெண் மற்றும் குழு :
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
பெண் குழு : பூ மாலை புகழ் மாலை
உனைத் தேடி வரும் வேளை
ஆண் : அன்பும் நல்ல பண்பும்
ரெண்டு கண் போல் காக்க வேண்டும்
பெண் குழு : வா ராஜா வாவென்று
வரவேற்பு தரும் வேளை
ஆண் : பணிவும் சொல்லில் கனிவும் கொண்டு
வாழ்த்தை ஏற்க வேண்டும்
பெண் : இளைஞன் நல்ல கலைஞன்
என்ற பேரை நீ வாங்கு
ஆண் : லலலலலலா லா
பெண் : நாளும் அந்த பேரால் இந்த
ஊரை நீ வாங்கு
ஆண் : ஒரு நாயகன் உதயமாகிறான்
பெண் : ஊரார்களின் இதயமாகிறான்
ஆண் : பள்ளியிலே பாடங்களை
படிக்கணும்
நல்ல புத்திசாலி பிள்ளையென
நடக்கணும்
ஆண் : சத்துணவு திட்டங்களும் எதுக்குடா
ஏழை சந்ததியும் உயரனும் அதுக்குடா
உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும்
பிறர்க்கு உதவணும்
ஆண் மற்றும் குழு : இதை நீ
ஒத்துக்கணும் கத்துக்கணும்
ஆண் : அறிஞனா சிறந்த மனிதனா
புரட்சி தலைவனா
ஆண் மற்றும் குழு : விளங்கும்
காலம் வரும் நேரம் வரும்
ஆண் : எங்க வீட்டு பிள்ளை என்று
தாய்க் குலம்தான் உன்னைக் கண்டு
எந்த நாளும் சொல்லும் வண்ணம்
வள்ளல் போல வாழ வேணும்
உள்ளங்களை ஆள வேணும்
பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்
ஆண் : ஊரார்களின் இதயமாகிறான்
குழு : ……………………………….
ஆண் : {மேலாடை ஹ மூடாமல்
ஹ பாவாடை போடாமல்
பொண்ணு ஒன்னு போனா
கண்ணு பாக்கும் அட்ரஸ் கேட்கும்} (2)
ஆண் : பூவும் வண்ண பொட்டு
கொண்டு கொடி போல் நடை போடு
குழு : லலல…..லாலாலா
ஆண் : நாணம் குல மானம்
தமிழ் பெண்ணின் பண்பாடு
பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
ஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன்தான்
வாசல் தேடி வந்ததொரு
வசந்த காலம்தான்
குழு : தகுதுகு தகுதுகு தகுதுகு
தகுதுகு தூ
அனைவரும் : ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்