ஒரு நாள் விடுமுறை நீயெடுத்தால்
விழிகள் மட்டும் சுரமடிக்கும்
மறுநாள் உனைப்பார்ப்பதற்கு
உன் தெருவில் கால்கள் அடம்பிடிக்கும்
வருகைப்பதிவு இல்லையென்றால்
மனதுக்கிடந்து படபடக்கும்
உன் பேரை அழைக்கையிலே
யேய் உயிரும் வந்து அங்கும் குறல் கொடுக்கும்
எனக்குள் வந்து எத்தனை நாளாச்சி
நெனப்புல தானே பாடுது என் மூச்சு
உன்ன சுத்தி காதல் கெரகணம் வந்தாச்சு
எனக்குள் வந்து எத்தன நாளாச்சி
நெனப்புல தானே வாழுது என் மூச்சி
உன்ன சுத்தி காதல் கெரகணம் வந்தாச்சே
வகுப்புக்குள் முன் இருக்கையிலே அமர்ந்து
வானத்தில் பறக்கின்றேன்
கரும்பலகையிலே எழுத்துக்களெல்லாம்
உன் பெயர் தானே நினைக்கின்றேன்
ஒரு முறை ஏற்றும் கொடியினிலே
நான் தினம் தினம் உன் முகம் பார்க்கின்றேன்
மாலையில் அடிக்கும் பள்ளி மணி
ஓசையை நானும் வெறுக்கின்றேன்
எனது புத்தகத்தில் முதல் பக்கம் நீதானே
உன்னுடன் இருப்பதற்கு மறுப்பக்கம் நானானேன்
வீட்டுக்கு வருவதற்கு என் தெருவும் வறம் கிடக்கு
தாழ்ப்பாலும் போடாமல் வீட்டுக்கதவும் திறந்திருக்கு..
என் வலி என்ன புரியலையா
எனது காதல் ஒரு பிழையா
புரிந்துக்கொள் என் மனமே
இளமை இன்னும் சில தினமே
உனது முகவரியில் என் பெயரை சேர்த்துவிட்டேன்
நானும் இடம்மாற நாள் ஒன்றைப்பார்த்துவிட்டேன்
இனி உன்னை மறப்பதற்கு என்னாலும் முடியாது
விரல் பிடித்து நடந்துவிட்டேன்
இனி பிரிவும் இனிக்காது
உனக்குள் வந்து எத்தனை நாளாச்சோ
நெனப்பிலே தானே வாழுறேன் என் கூச்சே
நம்மை சுற்றும் காதல் கெரகணம் வந்தாச்சு
எனக்குள் வந்து எத்தனை நாளாச்சு
நெனப்புல தானே வாழுதே என் மூச்சே
நம்மை சுத்தி காதல் கெரகணம் வந்தாச்சே
ஹேய் ஹேய்......