பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரு நாள் நினைவிது
பல நாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே
பெண் : மண நாள் அழைக்குது
சுகமாய் இருக்குது
உனக்கும் எனக்கும்
இனி திருமணமே..
ஆண் : ஒரு நாள் நினைவிது
பல நாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே
பெண் : மண நாள் அழைக்குது
சுகமாய் இருக்குது
உனக்கும் எனக்கும்
இனி திருமணமே..
ஆண் : வா வா வா அன்பே வா
பெண் : வா வா வா ராஜா வா
ஆண் : ஒரு நாள் நினைவிது
பல நாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே
பெண் : மண நாள் அழைக்குது
சுகமாய் இருக்குது
உனக்கும் எனக்கும்
இனி திருமணமே..
ஆண் : வில்லோடு நான்
அம்பாகவா
பெண் : பெண் மானை
நீ குறி பார்க்கவா
ஆண் : பூ மீது வண்டாக
நான் மாறவா
விரல் மீட்டத்தான்
வீணை தடை கூறுமா
பெண் : வண்டென்ன வரம் கேட்டு
வர வேண்டுமா
நிலம் கேட்டுத்தான்
மேகம் நீர் ஊற்றுமா
ஆண் : சந்தேகம் ஓடிப் போனதே
பெண் : சந்தோஷம் கூடிப் போனதே
ஆண் : உற்சாகம் ஏறிப் போச்சுதே
பெண் : நெஞ்சங்கள் ஒன்று சேர்ந்ததே
ஆண் : பண் பாடும்
காவியம்தான் இது
பாடிடும் நாள் இது
இளமை வேளையில்
இனிமை கூடியது..
பெண் : ஒரு நாள் நினைவிது
பல நாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே
ஆண் : மண நாள் அழைக்குது
சுகமாய் இருக்குது
உனக்கும் எனக்கும்
இனி திருமணமே..
பெண் : வா வா வா ராஜா வா
ஆண் : வா வா வா அன்பே வா
பெண் மற்றும் ஆண் :
ஆஹ்ஹ ஆஹா ஆஹா
ஆஹ்ஹ ஆஹா ஆஹா
ஆஹ்ஹ ஆஹா ஆஹா
பெண் : லால லாலா
லாலா லாலா
பெண் : கண்ணோடு நீ மணியாகவா
ஆண் : பெண்ணோடு நான்
துணை சேரவா
பெண் : பல வேஷம் நீ போட்டு
எனை மாற்றினாய்
பெண் மனதிலே
காதல் தீ மூட்டினாய்
ஆண் : கலையான சிலை
ஒன்றை நான் தேடினேன்
உனைப் பார்த்ததும்
நான் சிலையாகினேன்
பெண் : பெண் மானை
காளை வென்றதே
ஆண் : பொன்னான வேளை
வந்ததே
பெண் : செல்வங்கள்
வாழ்வில் சேருமே
ஆண் : தெய்வங்கள்
வாழ்த்துக் கூறுமே
பெண் : பண்பாடும்
காவியம்தான் இது
பாடிடும் நாள் இது
இளமை வேளையில்
இனிமை கூடியது..
ஆண் : {ஒரு நாள் நினைவிது
பல நாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே
பெண் : மண நாள் அழைக்குது
சுகமாய் இருக்குது
உனக்கும் எனக்கும்
இனி திருமணமே..} (2)
ஆண் : வா வா வா அன்பே வா
பெண் : வா வா வா ராஜா வா
ஆண் : ஓ மை லவ்
பெண் : ஓ மை லவ்
ஆண் மற்றும் பெண் :
ஓ மை லவ்
ஓ மை லவ்