ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா
ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா
கண்ணக் கட்டி ஆடும் ஆட்டம் கண்ணாமூச்சி விளையாட்டு
மனசக் கட்டி ஆடும் ஆட்டம் இங்கே ஆடும் விளையாட்டு
இந்த ஆட்டம் எதுவரை போகும் அதுவரை போகலாம்
இதில் யாரு ஜெயிப்பது என்று கடைசியில் பார்க்கலாம்
பெண் : ஒரு காலை விடிந்து விடும்
யாவும் விளங்கி விடும்
கைகள் இணைந்து விடும் நாள் காணலாம்
பாதைகள் மாறலாம் கூடலாம்
ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு...
ஆண் : எல்லாம் இன்று வேஷமாச்சு இங்கே ஏது மனசாட்சி
எனது கண்ணை நானும் நம்ப எங்கும் இல்லை ஒரு சாட்சி
இது பிரம்மன் எழுதிய வாழ்க்கை எனும் நாடகம்
இங்கு வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பாத்திரம்
பெண் : இங்கு வாழும் மனிதரிலே
யார்தான் நடிக்கவில்லை
வேஷம் போடவில்லை நான் பார்க்கிறேன்
பாசமே வேஷமாய் போனதே
ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா