பாடகி : ஆண்ட்ரியா ஜெரெமையா
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பெண் : ஹேய் …..
ஒரு கோப்பை வேண்டும்
கொண்டுவா …..
பெண் : கடவுளே இந்த உலகமே
தலை சுற்றவைக்கும் மதுக்குப்பியா
பெண் : கல் பிறந்ததும்
மண் பிறந்ததும்
பெண்ணும் பிறந்தாளே
அவள் கண்ணில் அன்றே
கண்ணீர் துளிகள்
கண்ணம் தீண்டியதே
குழு : பெண் என்பவள்
ஆண்பார்வையில்
மோகச்சதைதானா
என்னை வெட்டி கூறிட
குத்திக்கிழித்திட
விரல்கள் நீண்டிடுதே
பெண் : விழி உறங்கவில்லை
உணவிறங்கவில்லை
இந்த நாள் எனை
விட்டுவிட்டு நகரவில்லை
பெண் : ஒரு இறகெனவே
வரும் மரணம் அதில்
நான் பறந்திடத்துடித்தேனே
பெண் : ஹேய் …..
ஒரு கோப்பை வேண்டும்
கொண்டுவா …..
பெண் : ஹேய் …..
அதில் சாவை ஊற்றி
ஏந்தி வா……
ஆண் : தற்கொலை எண்ணம்
உங்களுக்குள் தலைதூக்குமாயின்
நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது
104 என்ற இந்த எண்ணிற்கு
தொடர்பு கொண்டு பேசுவதுதான்
மறுமுனையில் உங்கள் மீது
பிரியத்துடன் அக்கறை கொண்டு பேசி
உங்கள் எண்ணத்தை மாற்றுவதற்காக
அரசாங்க பணியாளர்கள் காத்திருக்கிறார்கள்
ஆண் : இதை எப்பிட்றா ஒரு பாட்டுக்கு நடுவுல
சொல்லலாம்ன்னு கேட்பீங்க
ஆனா ஒரு படத்திற்கு நடுவுல
தம்மடிக்கக்கூடாது
தண்ணியடிக்கக்கூடாதுன்னு
சொல்லலாம்ங்கிறப்ப
இதையும் சொல்லலாம்
பெண் : என் தனிமை தீவில்
வரும் வெள்ளை பூவே
நீ மரணம் காக்கும்
தெய்வச்சிறகா
பெண் : உண்மையிலே
எப்பொழுதோ இறந்து விட்டேன்
இறப்பை நான் இப்பொழுதே
மறந்துவிட்டேன்
பெண் : கொல்லாமல் கொல்லும்
காதல் போதை
வேண்டி வாங்கினேன்
நில்லாமல் ஓடும்
பூமி போதும்
சாக ஏங்கினேன்
பெண் : பெண்கள் நெஞ்சில்
உள்ளத்துன்பம்மெல்லாம்
செத்தால் கூட சாகாது இருக்கும்
பெண் : ஹேய் …..
ஒரு கோப்பை வேண்டும்
கொண்டுவா …..
பெண் : ஹேய் …..
அதில் சாவை ஊற்றி
ஏந்தி வா……