பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் பூர்ணிமா கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : ஜோஸ் பிராங்க்ளின்
பெண் : ஒரே ஒரு கண் பார்வை
ஒரே ஒரு மெய் தீண்டல்
அதை எண்ணி
உயிர் வாழ்வேன் அன்பே
ஆண் : ஒரே ஒரு கண் பார்வை
ஒரே ஒரு மெய் தீண்டல்
அதை எண்ணி
உயிர் வாழ்வேன் அன்பே
பெண் : பிரிவு இல்லாத காதல்
அது சுவர்கள் இல்லாத வீடு
இந்த உறவும் வாழ்க
பிரிவும் வாழ்க
வலிகள் வாழ்கவே
ஆண் : பிரிவு இல்லாத காதல்
அது சுவர்கள் இல்லாத வீடு
இந்த உறவும் வாழ்க
பிரிவும் வாழ்க
வலிகள் வாழ்கவே
பெண் : ஒரே ஒரு கண் பார்வை
ஒரே ஒரு மெய் தீண்டல்
அதை எண்ணி
உயிர் வாழ்வேன் அன்பே
பெண் : ம்ம் …ம்ம்ம் …ம்ம்ம்ம் …
ஆண் : வெயிலில் காயும் செடிகள் தானே
மழை தன்னை நேசிக்கும்
உடல் தாண்டும் காதல் தானே
உண்மை அன்பை யாசிக்கும்
பெண் : ஊரை விட்டு போனால் என்ன
உள்ளம் உன்னை பூஜிக்கும்
சிறகொன்று வேண்டும் என்று
சின்ன உள்ளம் நேசிக்கும்
ஆண் : உன் பேரை சொல்லிக்கொண்டு
உயிரை நான் கிள்ளிகொண்டு
காற்றோடு பேசிக்கொண்டு
வாழ்வேன் ராசாத்தி
பெண் : கண்ணீரை மூடிக்கொண்டு
கனவோடு பேசிக்கொண்டு
காற்றோடு தேடிக்கொண்டு
வாழ்வேன் கண்ணாலா
ஆண் : இடைவெளிகளின் வெளியிலே
இரு இதயங்கள் எரியுதே
பெண் : எரிவதிலும் சுகமிருக்கு
எரியும் மெழுகும் ஒளி வீசும்
ஆண் : அட நம்மை கண்டு
கண்ணீர் சிந்தி
கரைந்தே போனது வானம்
பெண் : ம்ம் …ம்ம்ம் …ம்ம்ம்ம் …
ம்ம் …ம்ம்ம் …ம்ம்ம்ம் …
பெண் : ஒரே ஒரு கண் பார்வை
ஒரே ஒரு மெய் தீண்டல்
அதை எண்ணி
உயிர் வாழ்வேன் அன்பே
ஆண் : ………………………
பெண் : எந்த பக்கம் பார்க்கும் போதும்
அன்பே உந்தன் பிம்பங்கள்
கண்ணில் ஏதும் கோளாறு இல்லை
கண்ணே என்னை நம்புங்கள்
ஆண் : மேகம் ஏதும் சிந்தாமல்
மண்ணில் ஏது ஈரங்கள்
கண்ணே உன்னை காணாமல்
கண்ணீர் செய்த சாரங்கள்
பெண் : ஊர் என்ன சொன்னால் என்ன
யார் என்ன சொன்னால் என்ன
இதயத்தின் ஆசை ஓசை
என்றும் நில்லாது
ஆண் : கை தீண்டல் வேண்டாம் பெண்ணே
கண் தீண்டல் போதும் கண்ணே
காலத்தின் கடைசி வரையில்
ஜீவன் போகாது
பெண் : உன்னை ஒரு முறை காணவே
உயிர் முழுவதும் ஏங்குதே
ஆண் : நெஞ்சடியில் காண்கிறேன்
நினைவே நினைவே நீங்காதே
பெண் : அட நெஞ்சே உன் வசம்
ஆகிய போது
நினைவும் கனவும் ஏது
பெண் : ம்ம் …ம்ம்ம் …ம்ம்ம்ம் …
ம்ம் …ம்ம்ம் …ம்ம்ம்ம் …