பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
குழு : ஓம் ஓம் ஓம்ம்ம்……..(8)
ஆண் : நாதம்…….ஓம்கார நாதம்…
ஆண் : நாத மயமான இறைவா இறைவா…
நாத மயமான இறைவா
தில்லை நடனமாடுகின்ற தலைவா
வேத மயமான சிவனே
இந்த விரல்கள் இருந்தென்ன பயனே
வேத மயமான சிவனே
இந்த விரல்கள் இருந்தென்ன பயனே
ஆண் : நாத மயமான இறைவா இறைவா…
ஆண் : மாலை சூடியவள் மௌனத்தில் இருக்க
பிள்ளை பேச்சில் மனம் புண்ணாகி தவிக்க
மாலை சூடியவள் மௌனத்தில் இருக்க
பிள்ளை பேச்சில் மனம் புண்ணாகி தவிக்க
மிருதங்கம் போல் இங்கு நானும்
ஏன் இரு பக்கம் அடி வாங்க வேண்டும்
மிருதங்கம் போல் இங்கு நானும்
ஏன் இரு பக்கம் அடி வாங்க வேண்டும்
தந்தை ஆணை மீறி நின்ற மகனே
தந்த காயம் ஆறவில்லை அறனே
ஆண் : நாத மயமான இறைவா இறைவா…
ஆண் : கங்கை நதியுடனே திங்கள்
முடி சுமந்து மங்கை ஒரு பாதி மேவ
இந்த அண்டம் குலுங்கி எழ என்றும்
அழகொளிரும் அங்கம் தனில் பாதம் தாவ
நீ உடுக்கை தனை கொண்டு ஓசை எழுப்புகையில்
தடுக்க விதி ஏதும் உண்டா
ஆண் : நீ உடுக்கை தனை கொண்டு ஓசை எழுப்புகையில்
தடுக்க விதி ஏதும் உண்டா
இங்கு உனக்கொரு விதியோ எனக்கொரு விதியோ
பிரித்துப் பார்ப்பதென்ன முறையோ
இது முறையா……இது முறையா……..