பாடகர் : பென்னி டயல்
இசை அமைப்பாளர் : டி. இமான்
ஆண் : ஒஹோஒ ஓஹூய் ….
ஆண் : உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி
ஆண் : உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்தா நில்லு
என்னாத்துக்கு பூச்சாண்டி
ஆண் : மஹாராணியா இருந்தாலுமே
மரியாத வேணும் வேணும்
ஒரு ஆம்பள முடி போடவே
முழுசா நீ மாற வேணும்
ஆண் : வெறும் வாயிலே மொழம் போடுற
வெவகாரம் ஏண்டி
அடி அடியே ஏய்
ஆண் : உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி
அடியே…உலக வாயாடி ..
ஆண் : உலய்ய வெச்சு சோறும் ஆக்காம
பொழுதண்ணிக்கும் வேல பாக்காம
தெருவ சுத்தி வர திமிறால
ஒடிபேண்டீ உன்கால …ஆஆ …
ஆண் : சிறு பொண்ணா நீ இல்லாம தள்ளாடினா
அத என்னணானு பேசும் ஊரு
ஒரு கல்யாணம் கச்சேரி பண்ணாமலே
தனி ஆளா நீ ஆவ போற
ஆண் : எது நல்லது கெட்டது தெரிஞ்சி
அத செய்யணும் பொம்பள புரிஞ்சி
விளையாட நெனெச்சாலே
வினையாகி போகுமே
ஆண் : உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி
அடியே…
ஆண் : வளவி சத்தம் கோயில் பாட்டாக
கொலுசு சத்தம் காதல் சீட்டாக
உசுர வந்து மோத
கட போட உறவானேன் நான்கூட..ஆஆ ..
ஆண் : அளவில்லாம முப்போதும்
கொண்டாடினா
அது பின்னால காட்டும் வேல
அளவு வேணும்னு முன்னோர்கள்
சொன்னாங்களே
அத என்னாட்டி போவ கீழ
ஆண் : ஒரு பெண்ணிடம் உள்ளது பொறுப்பு
அத நம்பிட வந்திடும் சிறப்பு
பணிவா நீ இருந்தாலே
கிடையாது சேதாரமே
ஆண் : உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி
ஆண் : ஹேய் ஹேய்
உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்தா நில்லு
என்னாத்துக்கு பூச்சாண்டி
ஆண் : மஹாராணியா இருந்தாலுமே
மரியாத வேணும் வேணும்
ஒரு ஆம்பள முடி போடவே
முழுசா நீ மாற வேணும்
ஆண் : வெறும் வாயிலே மொழம் போடுற
வெவகாரம் ஏண்டி
அடி அடியே ஏய்