பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆண் : நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் இங்கே
ஆண் : நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
ஆண் : உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே…..
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே….
ஆண் : விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
ஆண் : நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூ முகம் சிவந்தா போகும்
ஆண் : நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
ஆண் : பாவை உன் முகத்தை கண்டேன்
தாமரை மலரை கண்டேன்
பாவை உன் முகத்தை கண்டேன்
தாமரை மலரை கண்டேன்
ஆண் : கோவை போல் இதழை கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
கோவை போல் இதழை கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
ஆண் : வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னை கண்டு
ஆண் : நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் இங்கே
ஆண் : நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ