பாடகர் : சாய் சரண்
இசை அமைப்பாளர் : டி. இமான்
ஆண் : வருவது ஒருமுறை உலகிலே
இதை அறிகிற மனிதனும் கடவுளே
தவறுகள் திருந்திடும் வரையிலே
வரும் தடைகளும் தகர்ந்திடும் முடிவிலே
ஆண் : நமை நாமே உணர்ந்தாலே
கிடையாது வேதனை மனதிலே
நதி போல நடந்தாலே
ஒரு கோடி சூரியனும் தரையிலே
ஆண் : நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
குழு : ………………………………..
ஆண் : சிறகுகள் விரித்திடு பறக்கலாம்
வரும் சிரமங்கள் பொறுத்திடு சிரிக்கலாம்
அலைகடல் என தினம் குதிக்கலாம்
கடல் கடந்தொரு பெயரையும் எடுக்கலாம்
ஆண் : மழை ஊற்று அனல் காற்று
எதுவான போதிலும் ரசிக்கலாம்
சில வாரம் பல பூமி
என நாமும் மாறவே நினைக்கலாம்
ஆண் : நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
ஆண் : காலம் ஒன்று மாறும் என்று
காத்திருபதா நல்லது
காலம் தன்னை மாறச்செய்யும்
சாட்டை நெஞ்சிலே உள்ளது
ஆண் : தூசியாலே கலங்கும் விழியை
துடைப்பதா விசித்திரம்
காற்றும் கூட நமது பெயரை
உரைப்பதே சரித்திரம்
ஆண் : நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
குழு : வா நண்பா வா வா வா
ஆண் : அன்பை விட சிறந்தது
இல்லை என முழங்கிடு
புன்னகை என்னும் உடையே முகவரி
உள்ளவரை விழித்திரு
உள் மனதில் பசித்திரு
ஒற்றுமையில் இவ்வுலகை அலங்கரி
ஆண் : நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
குழு : நண்பா நண்பா
நண்பா வா வா வா
ஆண் : நண்பா வா நண்பா
குழு : நண்பா நண்பா
வா நண்பா வா வா வா