நல்ல தலைவனும் தலைவியும்
வாழும் வீடு தேவன் ஆலயம்
சங்கத் தமிழென நிலைத்திடும் நாளும்
இங்கு பாடும் காவியம்
இங்கு அண்ணன் என்று
தங்கை என்று ரெண்டு கிளி – இந்த
ரெண்டு கிளி கண்டதொரு அன்பின் வழி – இவை
காலம் தோறும் வாழ்த்தி வணங்கிடும் தலைவன்
ஹே ஹா ஹா.........(நல்ல)
தங்க குணங்களின் உறைவிடம்
தந்தை எனும் இந்த நிறைகுடம்
வாழ்த்துகள் வாங்கிடும் பிள்ளை நாம்
அன்னை மனம் ஒரு மலர் வனம்
அந்த வனத்தினில் தினம் தினம்
ஆடிடும் பாடிடும் முல்லை நாம்
எந்த வழி நல்ல வழி எங்க வழிதானே
எப்பொழுதும் சொல்லுபவன் நானே
எந்த மொழி அன்னை மொழி அந்த மொழிதானே
மந்திரம் என்றெண்ணுபவள் நானே
ஆனந்தம் கோடி வந்ததிங்கு தேடி
காலம் தோறும் வாழ்த்தி வணங்கிடும்
தலைவன் ஹே ஹா ஹா
நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு
எங்கும் பொழியுது ஒளி மழை
வண்ண விளக்குகள் பல வகை
ஊரெல்லாம் திருவிழா இன்றுதான்
இன்றும் வருகிற தலைமுறை
இந்த உறவுகள் தொடர் கதை
நால்வரின் ஜீவனும் ஒன்றுதான்
நெஞ்சங்களின் சங்கமங்கள்
எப்பொழுதும் வேண்டும்
வஞ்சி மகள் என்னுடைய ஆசை
பொங்குகின்ற உள்ளங்களின்
துள்ளல்களைப் போலே
எங்கும் இங்கு வாண வெடி ஓசை
ஆனந்தம் கோடி வந்ததிங்கு தேடி
காலம் தோறும் வாழ்த்தி
வணங்கிடும் தலைவன்....ஹா ஹே ஹே
நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு....