ஆஆஆஆ....ஆஆஆஆ....ஆஆஆஆ.
நலம் பாடுவேன் நீ வாழத்தான்
தினம் தோறுமே நான் தொழும் தெய்வமே...
நலம் பாடுவேன் நீ வாழத்தான்
நான் சொல்ல நினைத்ததை விழித் தான் சொல்ல
நாணங்கள் திரையிடும் நீ மெல்ல
வளைக்கரம் தொட நான் துள்ள
ஆசைகள் துளிர்விடும்
உறவுகள் வளர்பிறையோ காலங்கள்
வளர்ந்திடும் தொடர்கதையோ
நாளெல்லாம் இனியொரு பிரிவில்லையோ
நீயென்றால் நானென்று பொருளில்லையோ
அம்மம்மா மாலை மஞ்சளொடு மஞ்சம் வந்த கொடி
தோளைக் கண்டவுடன் தொத்திக் கொண்ட கிளி
தேவன் கையிரண்டை தேடி வந்த கனி
உனக்கென பிறந்தது உயிருடன் கலந்ததம்மா
நலம் பாடுவேன் நீ வாழத்தான்...
தாயாக மடியினில் ஒரு சேயாக
தாலாட்டும் பிறந்தது பேர் சொல்ல
திருமகன் புகழ் ஊர் சொல்ல
காலங்கள் கனிந்ததும்
மழலைகள் இனிப்பதென்ன
பூச்செண்டு மடல்களை விரிப்பதென்ன
தேன்சிட்டு களுக்கென சிரிப்பதென்ன
தாயுள்ளம் கவலைகள் மறுப்பதென்ன
அம்மம்மா தென்றல் போல இளம் பிள்ளை ஓடி வரும்
தேரைப் போல சிறுமேனி ஆடி வரும்
அன்னை நெஞ்சில் வரும் இன்பம் கோடி பெறும்
இதைவிட உலகினில் எனக்கொரு சுகம் வருமோ
நலம் பாடுவேன் நீ வாழத்தான்
தினம் தோறுமே நான் தொழும் தெய்வமே...
நலம் பாடுவேன் நீ வாழத்தான்