பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
பெண் : நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு
ஆண் : நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
ஆண் : பூஜைக்கொரு புஷ்பம் வந்தது
புனிதம் என்று பேரைக் கொண்டது
பெண் : தெய்வம் அதை சூடிக் கொண்டது
மாலையென தோளில் கொண்டது
ஆண் : பூவில் உள்ள தேனைக்கண்டு
ஒரு சோலை வண்டு
அதை திருடிச்சென்றது
பெண் : தலைவன் ஒரு கோயிலில்
அவன் தேவியோ தெரு வாசலில்
ஆண் : நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
பெண் : நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு
பெண் : மானிடத்தில் மோகம் வந்தது
சீதைக்கதில் சோகம் வந்தது
ஆண் : யாரை இதில் குற்றம் சொல்வது
விதியின் வழி வாழ்க்கை செல்வது
பெண் : போட்டு வைத்த கோடு தாண்டி
தன் வீடு தாண்டி
அன்னம் தேட சென்றது
ஆண் : மணக்கும் வரை பூக்கடை
மணம் மாறினால் அது சாக்கடை
ஆண் : நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
பெண் : நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு
ஆண் : நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு