பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கோவை முரளி
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்
கள்ளத் தோணி ஏறிப் போறேன்
கப்பல் வாங்கி கரை வரப்போறேன்
எதிர்காலம் எங்கள் கையிலே..ஆஆஆ…
ஆண் : நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்
கள்ளத் தோணி ஏறிப் போறேன்
கப்பல் வாங்கி கரை வரப்போறேன்
எதிர்காலம் எங்கள் கையிலே..ஏ..ஏ..ஏ..ஹேய்…
ஆண் : நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்….
குழு : ………………..
ஆண் : திரைக்கடல் ஓடி திரவியம் தேடி
வாழ்க என்று சொன்னாங்க
மூத்தவர் சொல்லை மறந்திடவில்லை
போவோம் இன்று ஒண்ணாக
ஆண் : பொம்பளை கொஞ்சம் கூட இருந்தா
பொழுதும் போகும் சுகமாக
தாவணி கொஞ்சம் மேல விழுந்தா
போதை ஏறும் பொதுவாக
ஆண் : பொருள் தேடு நாற்பது வரைக்கும்..
குழு : லாலாலா..
ஆண் : சுகம் தேடு அறுபது வரைக்கும்..
குழு : லாலாலா..
ஆண் : சுகம் காண வயசில்லை அண்ணே…
குழு : லாலாலா..
ஆண் : சுகம் இருக்கும் துடிப்புள்ள வரைக்கும்….
குழு : லாலாலா..
ஆண் : கடலுக்கு கரையுண்டு அம்பி
காதலுக்கு முடிவில்லை தம்பி
துணிந்தாலே துன்பம் இல்லையே……
குழு : …………..
ஆண் : நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்
ஆண் : நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்
குழு : ………………………
ஆண் : அடிக்கடி உன்னைத் தொடுவதினாலே
அங்கம் தேய்ஞ்சு போகாது
மேகங்கள் உரசிப் போவதினாலே
வானம் தேய்ஞ்சு போகாது
ஆண் : நாடு கடந்து வருவதினாலே
நாணம் மாறிப் போகாது
கூடு கடந்து வருவதினாலே
குருவி காக்கை ஆகாது
ஆண் : பெண்ணாசை இல்லையென்றால்..
குழு : லாலாலா..
ஆண் : பொன்னாசை வருவது இல்லை…
குழு : லாலாலா..
ஆண் : பொன்னாசை இல்லையென்றால்..
குழு : லாலாலா…
ஆண் : புவி மேலே மாறுதல் இல்லை…
குழு : லாலாலா..
ஆண் : சிவன் இன்றி சக்தியும் இல்லை
இவளின்றி முக்தியும் இல்லை
இப்போது இன்பம் கொள்ளையே…..
குழு : ………………………
ஆண் : நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்
ஆண் : நான்தான்டா அனுமான் பேரன்
கடல் தாண்டி சீமைக்கு போறேன்
ஆண் : கள்ளத் தோணி ஏறிப் போறேன்
ஆண் : கப்பல் வாங்கி கரை வரப்போறேன்
இருவர் : எதிர்காலம் எங்கள் கையிலே..ஏ..ஏ…ஏ..ஹேய்…..
குழு : ……………………..