யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
இமைகள் மூடிய கண்ணாக
இதயம் தேடிய பெண்ணாக
ஓஹோ ...
இரவாய் பகலாய் நீ இருக்க
இரவாய் பகலாய் நீ இருக்க
உறவாய் உயிராய் நானிருக்கஆஹஹா
யாருக்கு யார் என்று தெரியாதா
ஊரார் வார்த்தையை கேட்காமல்
உற்றார் முகத்தைப் பார்க்காமல்
ம்ஹ¤ம்
ஊரார் வார்த்தையை கேட்காமல்
உற்றார் முகத்தைப் பார்க்காமல்
நேராய் நெஞ்சில் நின்றவரே
நினைவால் என்னை வென்றவரே
யாருக்கு யார் என்று தெரியாதா
பருவம் என்றொரு பொழுது வரும்
பாவை என்றொரு தேவை வரும்
பருவம் என்றொரு பொழுது வரும்
பாவை என்றொரு தேவை வரும்
உருவம் என்றொரு அழகு வரும்
ஒவ்வொரு நாளும் பழக வரும்
உருவம் என்றொரு அழகு வரும்
ஒவ்வொரு நாளும் பழக வரும்
பழகும் வரையில் தயக்கம் வரும்
பழகிய பின்னும் மயக்கம் வரும்
பழகும் வரையில் தயக்கம் வரும்
பழகிய பின்னும் மயக்கம் வரும்
காதல் காவலைக் கடந்து வரும்
காலங்கள் தோறும் தொடர்ந்து வரும்
யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
ஆஹா ஹா