பாடகர் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : ஹே நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
கண்ணே சிரித்து விடு
கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு….
வாகை……சூடு….
பெண் : நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
கண்ணா சிரித்து விடு
கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு….
வாகை……..சூடு….
ஆண் : மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா
சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா
பெண் : புதைப்பது கூட விதைப்பது ஆகும்
முளைத்தால் என்ன செய்வாய்
ஆண் : மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா
சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா
பெண் : புதைப்பது கூட விதைப்பது ஆகும்
முளைத்தால் என்ன செய்வாய்
ஆண் : அட விதியொரு சதி செய்யும்
திரை மறைவாய்
பெண் : நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
ஆண் : கண்ணா சிரித்து விடு
கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு….
வாகை……..சூடு….
ஆண் : அஹ ஹா அஹாஹ் அஹ
வுஹூ எஹே ஹே
பெண் : நினைப்பது வேறு நடப்பது வேறு
இதுதான் உலக நியதி
ஆண் : கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
மனிதன் ஆயுள் கைதி
பெண் : நினைப்பது வேறு நடப்பது வேறு
இதுதான் உலக நியதி
ஆண் : கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
மனிதன் ஆயுள் கைதி
பெண் : இதை உணர்ந்தவன்
ஜெயிப்பது மிக உறுதி…
ஆண் : ஹே நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
பெண் : கண்ணே சிரித்து விடு
கண்ணால் எரித்து விடு
பகையுடன் விளையாடு….
ஆண் : வாகை……சூடு….
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்
பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்
ஆண் : …………………………..
பெண் : ……………………………