பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : முருகா என்னும் மூன்றெழுத்து
அதை சொன்னால் மாறும் தலையெழுத்து
பெண் : முருகா என்னும் மூன்றெழுத்து
அதை சொன்னால் மாறும் தலையெழுத்து
குமரா என்று கையெடுத்து நீ
கும்பிட வருவான் வேலெடுத்து..
குமரா என்று கையெடுத்து நீ
கும்பிட வருவான் வேலெடுத்து..
பெண் : முருகா என்னும் மூன்றெழுத்து
அதை சொன்னால் மாறும் தலையெழுத்து
பெண் : முருகா முருகா என்று சொன்னாலே போதுமா
முறையோடு வணங்கிட வேண்டாமா
முருகா முருகா என்று சொன்னாலே போதுமா
முறையோடு வணங்கிட வேண்டாமா
குமரா குமரா என்று கும்பிட்டால் போதுமா
ஆச்சார அனுஷ்டானம் வேண்டாமா..
முருகா முருகா என்று சொன்னாலே போதுமா
முறையோடு வணங்கிட வேண்டாமா
முறையோடு வணங்கிட வேண்டாமா
பெண் : காலால் கடவுளை அளந்தானே
அந்த கண்ணப்பன் சாத்திரம் அறிந்தானா
அம்பால் விழியை பறித்தானே உண்மை
அன்பால் லிங்கத்தில் பதித்தானே
முருகா என்னும் மூன்றெழுத்து
அதை சொன்னால் மாறும் தலையெழுத்து
பெண் : சஷ்டி விரதங்கள் கந்த ஹோமங்கள்
நிஷ்டை நேமங்கள் எதற்காக
சக்தி வேலனின் திருவருள் வாய்த்த
ஜபதபம் வேண்டும் அதற்காக
பெண் : இஷ்டம் போலவே வணங்குவதோ
வெறும் பக்தி போதுமென முழங்குவதோ
ஆகம விதிகளை மீறுவதோ
அதில் அருள் வரும் என்று கூறுவதோ
பெண் : ஔவை அதிகம் படிச்சவதான் அவ
ஆயிரம் கவிதை வடிச்சவதான்
முருகனின் முன்னால் முழித்தாளே
சுட்ட பழம் என்று சொன்னதும் திகைத்தாளே
சுட்ட பழம் என்று சொன்னதும் திகைத்தாளே
பெண் : பூஜை புனஷ்காரம் தேவையில்லை எனில்
தெய்வ அபச்சாரம் விளையாதோ
பெண் : சாமி துணையென்று கூவி அழைத்தாலே
தோன்றும் பெரும் பாவம் தொலையாதோ
பெண் : சாத்திரம் எல்லாம் சொன்ன வழி நம்
ஜென்மம் கரை சேர நல்ல வழி
பெண் : ஏழை அறிந்தது அன்பு வழி அது
கொண்டு சேர்க்காதோ இன்ப வழி…
பெண் : முருகா…
பெண் : முருகா….
பெண் : முருகா…
பெண் : முருகா….
பெண் : முருகா…
பெண் : முருகா….
பெண் : முருகா…
பெண் : முருகா….
பெண்கள் : முருகா…முருகா….முருகா…முருகா…
முருகா…முருகா….முருகா…முருகா…