பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்
பெண் : மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
அள்ளி தர உன்னாலதான் ஆகுமா
பெண் : மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்
பெண் : வேலியில சிக்கிக்கிட்டு
வேதனைய பட்டுக்கிட்டேன்
தாலி இல்ல பொட்டும் இல்ல
புள்ள கூட பெத்துகிட்டேன்
பெண் : வேலியில சிக்கிக்கிட்டு
வேதனைய பட்டுக்கிட்டேன்
தாலி இல்ல பொட்டும் இல்ல
புள்ள கூட பெத்துகிட்டேன்
பெண் : ஊரு சனம் காலடியில்
என் பொழப்பதான் மிதிக்கும்
ஊருக்குள்ள காத்தடிச்சா
எங்க கதைதான் பறக்கும்
பெண் : இங்கிலாந்து ராணி என்ன
அம்மன் ஆன சாமி என்ன
ஆம்பளையின் கையில் அவளும்
அடங்கித்தான போக வேணும்
ஏழை பொண்ணு என்னைகூட
ராணியாக பார்க்கும் மாமா
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
அள்ளி தர உன்னாலதான் ஆகுமா
பெண் : மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்
பெண் : ஊர சுத்தும் கன்னுக்குட்டி
சேர்ந்துகிட்ட ஆட்டுக்குட்டி
உன்ன இப்ப விட்டுபுட்டு
ஊரு மேய போவதென்ன
பெண் : ஊர சுத்தும் கன்னுக்குட்டி
சேர்ந்துகிட்ட ஆட்டுக்குட்டி
உன்ன இப்ப விட்டுபுட்டு
ஊரு மேய போவதென்ன
பெண் : நான் புடிச்ச கன்னுக்குட்டி
அது புடிச்ச ஆட்டுக்குட்டி
வட்டம் போட்டு வந்ததென்ன
கைய விட்டு போனதென்ன
பெண் : கைத்துணையா யாரும் இல்ல
தாயும் ஒன்னு பிள்ளையும் ஒன்னு
ஆத்துக்குள்ள போகுதம்மா
காது கெட்ட பரிசல் மேல
யாரு கதை எனக்கெதுக்கு
என் கதைய கேட்டுப்பாரு
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
அள்ளி தர உன்னாலதான் ஆகுமா
பெண் : மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்
மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
அள்ளி தர உன்னாலதான் ஆகுமா