பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
ஆண் : இரு விழி கவிதை தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை
ஆஆ ஆ ஆஆ
இரு விழி கவிதை தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை
ஆண் : புதுப்புது வார்த்தை
தினம் தினம் தேடி
பார்வையில் அமுதாய் அவள் வடிப்பாள்
நீர் அலைப்போலவே நீல விழிக்கோலங்கள்
நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
என் கற்பனைக்கு விதை தூவினாள் ஓய் ஓய் ஓய் ஓய்
என் கற்பனைக்கு விதை தூவினாள்
ஆண் : மூங்கிலிலே ஆ ஆ ஆ ஆ
பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ
காற்றலையை ஏ ஏ ஏ ஏ
தூதுவிட்டேன் தர தரர தரர தரர
ஆண் : ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த
மின்னலென நெளிந்த மேனகையோ
ஆ ஆ ஆஆ…..ஆ….
ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த
மின்னலென நெளிந்த மேனகையோ
ஆண் : செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே
இனிப்பெனும் சுவையை கற்றுக்கொண்டது ஆ ஆ ஆ
மாது இதழ் இடத்திலே மாதுளங்கனி
முத்தை சிவப்பாக்கவே மா தவம் செய்தது
அவள் வரம் தரவே செந்நிறமானது ஒஒய் ஓய் ஓய் ஓய்
அவள் வரம் தரவே செந்நிறமானது
ஆண் : மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை….தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்த பின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
லலல…..லல…ல ரரர ர ர ர……ல ரரர ரரர…..