பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசயிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா
ஆண் : அதை நான்தான் மறக்கலையே
அதை நீதான் நெனக்கலையே
அந்த காலம் அன்பு கோலம்
இன்னும் நெஞ்சோடு நீங்காமல்
நின்றாடுது
ஆண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா
ஆண் : ஆனந்தம் நம் வாழ்வில்
தென்பட்டது
அதில் கண்பட்டது
மனம் புண் பட்டது
இந்த பேதங்கள் ஏற்பட்டது
ஆண் : ஆனந்தம் நம் வாழ்வில்
தென்பட்டது
அதில் கண்பட்டது
மனம் புண் பட்டது
இந்த பேதங்கள் ஏற்பட்டது
ஆண் : தரை மேலே ஓடும் நதி
கிளை பாயும் போகும் வழி
கடல்தானே சேரும் இடம்
அந்த நாளூம் நாளை வரும்
வரும் காலம் பொன்னாகட்டும்
சொந்தம் ஒன்னாகட்டும்
அது கண்ணோடு கண்ணாகட்டும்
வாம்மா
ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
ஆண் : கல்யாணம் நன் நாளில்
நான் கண்டது
ஓர் ஊர்கோலமா வெறும் நீர்கோலமா
அது பொய்யான வைபோகமா
ஆண் : கல்யாணம் நன் நாளில்
நான் கண்டது
ஓர் ஊர்கோலமா வெறும் நீர்கோலமா
அது பொய்யான வைபோகமா
ஆண் : பிடிவாதம் ஆகாதம்மா
பந்த பாசம் போகாதம்மா
வந்த கோபம் ஆறாததோ
எந்த நாளும் தீராததோ
சிறு ஊடல் உண்டாகலாம்
சொந்தம் ரெண்டாகலாம்
அது தன்னாலே ஒன்றாகலாம் வாம்மா
ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து
உக்காந்து பேசுதம்மா………
அது உக்காந்து பேசயிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா
ஆண் : அதை நான்தான் மறக்கலையே
அதை நீதான் நெனக்கலையே
அந்த காலம் அன்பு கோலம்
இன்னும் நெஞ்சோடு நீங்காமல்
நின்றாடுது
ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து
உக்காந்து பேசுதம்மா………
அது உக்காந்து பேசயிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா