பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
ஆண் : மெல்ல பேசு மெல்ல பேசு
மெல்ல பேசு மெல்ல பேசு
கண்ணாடி பாத்திரத்தை கல் மீது
வைப்பதுபோல்
மெல்ல பேசு மெல்ல பேசு
பெண் : அக்கம் பக்கம் பார்த்து
ஆண் : ஹ்ம்ம்
பெண் : ஆசை பின்னல் போட்டு
ஆண் : ஒஹ்
பெண் : அக்கம் பக்கம் பார்த்து
ஆசை பின்னல் போட்டு
ஆண் : கன்னங்களை சேர்த்து
காதுக்குள்ளே பேசு
பெண் : ஸ்ஸ்ஸ்ஹ்
மெல்ல பேசு மெல்ல பேசு…….
ஆண் : கைவளைத்தால் உன் கைவளைகள்
என் காவலில் ஆடட்டுமே
பெண் : காற்சலங்கை உன் கால்களுடன்
என் காதலை பேசட்டுமே
ஆண் : இன்பம் உண்டு
பெண் : ஹ்ம்ம்
ஆண் : அள்ளி வீச
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : இன்பம் உண்டு அள்ளி வீச
பெண் : இதழ்களினால் என்ன பேச….
ஆண் : இச் ச் ச்
மெல்ல பேசு
பெண் : ஸ்ஸ் மெல்ல பேசு
ஆண் : இருப்பதெல்லாம் இன்று தீர்ந்து விட்டால்
பின்பு என்னதான் பேசுவது
பெண் : இலை மறைவு கொஞ்சம் காய் மறைவு
அந்த இன்பந்தான் வாழுவது
ஆண் : சொல்லி தரும் கலை இல்லையே…..
சொல்லி தரும் கலை இல்லையே…..
பெண் : சொர்க்கத்துக்கு விலை இல்லையே…
ஆண் : ஹோ…..இச் ச் ச் மெல்ல பேசு
பெண் : மெல்ல பேசு
ஆண் : கண்ணாடி பாத்திரத்தை
பெண் : கல் மீது வைப்பதுபோல்
மெல்ல பேசு
ஆண் : ஸ் மெல்ல பேசு
பெண் : ஸ் மெல்ல பேசு
ஆண் : ஸ்ஸ்ஹ்……