பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : ஆ….ஆ….ஆ…ஆ…..ஆ…..
ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே…..
தேகமே தேயினும் தேன்மொழி
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
ஏ…..ஏ…..ஏ…..
மேகமே மேகமே பால் நிலா தேயுதே…..
பெண் : தந்தியில்லா வீணை சுரம் தருமோ
தநிரிச ரிம தநிச தநிபகா
தந்தியில்லா வீணை சுரம் தருமோ
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ
ஆ…..ஆ…ஆ…ஆ…ஆ.
பாவையின் ராகம் சோகங்களோ
நீரலை போடும் கோலங்களோ
பெண் : மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
ஆ…..ஆ…ஆ…ஆ…
மேகமே மேகமே பால் நிலா தேயுதே…..
பெண் : தூரிகை எரிகின்ற போது
இந்த தாள்களில் ஏதும் எழுதாது
தூரிகை எரிகின்ற போது
இந்த தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
அது எதற்கோ….ஓ ஓஒ…. ஹோ ஓ ஓஒ
பெண் : மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
ஆ…..ஆ…ஆ…ஆ…
மேகமே மேகமே பால் நிலா தேயுதே…..