பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : ………………….
பெண் : { மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன } (2)
ஸ்வாமி
பெண் : { அழகர் மலை
அழகா இந்த சிலை
அழகா என்று மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன } (2)
பெண் : நவரசமும்
முகத்தில் நவரசமும்
பெண் : { மலர்ந்திருக்கும்
முகத்தில் நவரசமும்
செக்க சிவந்திருக்கும்
இதழில் கனி ரசமும் } (2)
கண்டு
பெண் : மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
ஆண் : ……………………
பெண் : { எங்கிருந்தாலும்
உன்னை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால்
வேறு யார் அறிவார் } (2)
பெண் : { பாவையின்
பதம் காண நாணமா } (2)
{ உந்தன் பாட்டுக்கு நான்
ஆட வேண்டாமா } (2)
பெண் : மாலவா
வேலவா மாயவா
ஷண்முகா
பெண் : மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
ஆண் : ……………………
பெண் : { நாதத்திலே
தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை
நான் மறந்தேன் } (2)
பெண் : மோகத்திலே
என்னை மூழ்க வைத்து } (2)
{ ஒரு ஓரத்திலே நின்று
கள்வனை போல் } (2)
பெண் : மாலவா
வேலவா மாயவா
ஷண்முகா
பெண் : மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
ஆண் : ……………………
பெண் : மானாட
மலராட மதி ஆட
நதி ஆட மங்கை
இவள் நடனமாட
பெண் : வானாட
மண்ணாட கொடி
ஆட இடை ஆட
வஞ்சி இவள்
கைகள் ஆட
பெண் : சுவையோடு
நானாட என்னை நாடி
இதுவேளை இரவினில்
துணையாக ஓடி வருவாய்
பெண் : தூயனே மாலவா
மாயனே வேலவா என்னை
ஆளும் ஷண்முகா வா
பெண் : மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
பெண் : அழகர் மலை
அழகா இந்த சிலை
அழகா என்று மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
ஆண் : ……………………