பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சசி ரேஹா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத நேரமிது
சூரியன் மீது சந்தனம் அள்ளி
யாரது பூசியது
ஆண் : மாளிகை தேவதை வாடியதோ
தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ
என்னை எண்ணி
மாளிகை தேவதை வாடியதோ
தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ
ஆண் : மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத நேரமிது
குழு : …………………………….
ஆண் : பாவையிவள் பாதம் பட்டால்
பாதைக்கும் மோகம் வரும்
பெண் : ராஜன் மகன் தொட்டு விட்டால்
ஆடைக்கும் ஆசை வரும்
ஆண் : பாவையிவள் பாதம் பட்டால்
பாதைக்கும் மோகம் வரும்
பெண் : ராஜன் மகன் தொட்டு விட்டால்
ஆடைக்கும் ஆசை வரும்
ஆண் : உனை மூடும் அந்த ஆடை
பல சேதி அறியும்
பெண் : நீ கேட்டால் உனக்காக
அது சீதனம் ஆகிவிடும்
ஆண் : மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத நேரமிது
குழு : ………………….
பெண் : பூ விரிந்த சாலையெங்கும்
மேகங்கள் ஊர்வலங்கள்
ஆண் : கூந்தலினை கோதிவிடும்
ஆயிரம் பூமரங்கள்
பெண் : பூ விரிந்த சாலையெங்கும்
மேகங்கள் ஊர்வலங்கள்
ஆண் : கூந்தலினை கோதிவிடும்
ஆயிரம் பூமரங்கள்
பெண் : புவி யாவும் மலர் தூவும்
அதில் மேனி வலிக்கும்
ஆண் : அந்திமாலை இந்த மாலை
எந்தன் மார்பில் ஓய்வெடுக்கும்
குழு : மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத லீலை இது
சூரியன் மீது சந்தனம் அள்ளி
யாரது பூசியது
குழு : மாளிகை தேவதை வாடியதோ
பெண் : தென்றல் தேடி
குழு : மாலையில் தாமரை ஏங்கியதோ
பெண் : என்னை எண்ணி
குழு : மாளிகை தேவதை வாடியதோ
பெண் : தென்றல் தேடி
குழு : மாலையில் தாமரை ஏங்கியதோ
லல லால லாலாலல லல லால லாலாலலா