பாடகர்கள் : சூலமங்கலம் ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி
மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண்கள் : மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
பெண்கள் : மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
பெண் : பணமிருக்கும் பலமிருக்கும்
உங்கள் வாசலில்
பெண் : நல்ல குணமிருக்கும் குலமிருக்கும்
எங்கள் வாசலில்
பெண் : பொன் மணமும் பொருள் மணமும்
உங்கள் வாசலில்
பெண் : புதுப் பூ மணமும் பா மணமும்
எங்கள் வாசலில்
பெண்கள் : மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
பெண்கள் : கல்வி மகள் வாசம் செய்யும்
வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலைவணங்கும்
கோவில் எங்கள் வாசல்
பெண்கள் : செல்வ மகள் வாசமலர்
வாழ வந்த வாசல்
செல்வ மகள் வாசமலர்
வாழ வந்த வாசல்
செல்வமுடன் புகழ் மணமும்
சேர வந்த வாசல்
பெண்கள் : மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
பெண்கள் : தங்க நகை வைர நகை
நிறைந்திருக்காது
இங்கு தங்க வரும் பெண்மணிக்கு
சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது
அதைப் பொழுதெல்லாம் பார்த்திருந்தால்
பசி எடுக்காது
பெண்கள் : மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா