பாடகர்கள் : யாசின் நிசார்,
எஸ். ரியாஸ் மற்றும்
அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
ஆண் மற்றும் பெண் :
{மலரின் நறுமணம் போகும் இடம்
குழலின் பாடல்கள் போகும் இடம்
அணைந்த சுடர்கள் போகும் இடம்
அது தான் நாமும் போகும் இடம்} (2)
ஆண் மற்றும் பெண் :
{போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம்} (2)
ஆண் மற்றும் பெண் :
{மாதா கோயில் ஜெப ஒலி
பள்ளி வாசல் அழைப்பொலி
ஹிந்து ஆலய மணி ஒலி
எல்லாம் ஒன்றாய் போகும் இடம்} (2)
ஆண் மற்றும் பெண் :
{போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம்} (2)
ஆண் மற்றும் பெண் :
{அந்த இடம் நம் சொந்த இடம்
அனைத்து பொருளும் வந்த இடம்
அங்கே மதங்கள் ஏதும் இல்லை
அமைதிக்கென்றும்
சேதம் இல்லை} (2)
ஆண் : மதுவும் வண்டும்…
பெண் : வேறில்லை
ஆண் : கண்ணீர் புன்னகை….
பெண் : வேறில்லை
ஆண் : அதுவும் இதுவும்….
பெண் : வேறில்லை
ஆண் : அனைத்தும் ஒன்றே….
உண்மையிலே
ஆண் மற்றும் பெண் :
மலரின் நறுமணம் போகும் இடம்
குழலின் பாடல்கள் போகும் இடம்
அணைந்த சுடர்கள் போகும் இடம்
அது தான் நாமும் போகும் இடம்
ஆண் மற்றும் பெண் :
{போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம்} (2)