பாடகர் : விஜய் இயேசுதாஸ்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
குழு : {துந்து நானானே
துந்து நானானே
துந்து நானானே
துந்து நானா நா} (3)
ஓஹோ…ஓஹோ…ஹோ..ஓஒ…
ஆண் : மைனா ரெண்டு
மைனா ரெண்டு
வலியோடு வழித்தேடும்
மைனா ரெண்டு
ஆண் : காதல் உண்டு
கண்ணீர் உண்டு
கண்ணோடு அச்சம் கொஞ்சம்
மிச்சம் உண்டு
ஆண் : உழிகொண்டு மலை வெட்டு
அது வழியாகி தீரும்
நீ துணையாக உன்னை நம்பி
போவாய் தம்பி
ஆண் : ஒளிக்கொண்டு இருள் வெட்டு
அது விடிவாகி தீரும்
ஒரு சிறுபேதை வந்தாலப்பா
உன்னை நம்பி
ஆண் : மைனா ரெண்டு
மைனா ரெண்டு
வலியோடு வழித்தேடும்
மைனா ரெண்டு
ஆண் : காதல் உண்டு
கண்ணீர் உண்டு
கண்ணோடு அச்சம் கொஞ்சம்
மிச்சம் உண்டு
ஆண் : உனக்கொரு பொறப்பு
எனக்கொரு பொறப்பு
இருவரை இணைத்தே
நடக்குது பொழப்பு
ஆண் : கரைகளை பற்றி கொண்டு
நதி நடை போடுதடி
கண்ணே என்னை கட்டி கொண்டு
நீ ஓடடி
ஆண் : நான் வெட்டு கத்தி
குத்துக்ககத்தி விட்டுப்புட்டேன்
உன் வெட்டருவா
கண்ணுக்குள்ள சிக்கிக்கிட்டேன்
ஆண் : நான் கொலகாரன்
ஊர விட்டு தப்பி வந்தேன்
உன் கொலுசுக்குள்
மணியாக மாட்டிக்கிட்டேன்
ஆண் : என் கை ரெண்டும்
கத்தி பெண்ணே
கால் ரெண்டும்
வேல்கள் கண்ணே
ஆண் : கட்டாயம் காதல் யூத்தம்
வெல்வேன் பின்னே
ஆண் : மைனா ரெண்டு
மைனா ரெண்டு
வலியோடு வழித்தேடும்
மைனா ரெண்டு
ஆண் : காதல் உண்டு
கண்ணீர் உண்டு
கண்ணோடு அச்சம் கொஞ்சம்
மிச்சம் உண்டு
குழு : {துந்து நானானே
துந்து நானானே
துந்து நானானே
துந்து நானா நா} (3)
ஓஹோ…ஓஹோ…ஹோ..ஓஒ…