பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர் : கௌஷிக் கிரிஷ்
பெண் : மகவே இனிய நாள் இது வாராய்
இனிமேல் புது விடியல் வரும் வாராய்
நீயும் நானும்
பார்க்கும் முதல் நாளில்
இருவருமே பிறப்போமே
இறப்போமே ஒரு அறையில்
பெண் : எனது தமிழ்
உன்னை வளர்க்கும் அன்பே வாராய்
அவனது அனுபவம்
உன்னை அணைக்கும் வாராய்
பெண் : எனது தமிழ்
உன்னை வளர்க்கும் அன்பே வாராய்
அவனது அனுபவம்
உன்னை அணைக்கும் வாராய்
பெண் : விழி ஓரம் ஈரம் இல்லாமல்
மனதோரம் பாரம் இல்லாமல்
காப்பேனே அணைப்பேனே
என் மார்பின் நடுவினிலே
பெண் : வாழ்கையின் ஓட்டம் நின்றாலும்
உலகமே எதிர்த்து நின்றாலும்
நட்பிற்கும் அது தாங்கும்
தோள் கொடுக்கும் எந்நாளும்
பெண் : இறையே இறையே என்று கைகளை
ஏந்தி சென்று நில்லு
அவனும் இல்லை என்றால்
இந்த இறைவியை தேடி வந்து நில்லு
பெண் : இது நிலவின் மடி வந்து தூங்கடா
வந்து தூங்கடா
இனி எதுவும் கடந்து போகும் தூங்கடா
தூங்கடா
பெண் : மகவே இனிய நாள் இது வாராய்
இனிமேல் புது விடியல் வரும் வாராய்
நீயும் நானும்
பார்க்க வழி இல்லையோ
இருவருமே பிறப்போமே
இணைவோமே மறு உலகில்
நான் பிறந்தேனே இறந்தேனே ஒரு அறையில்
நீ பிறக்கிறாய் இறக்கிறாய் கருவறையில்
நீ பிறக்கிறாய் இறக்கிறாய் என் கருவறையில்