பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
குழு : .………………………..
பெண் : மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்
மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்
பெண் : மூவகை தமிழும் புகழும்
முருகனைப் போலே திகழும்
மூவகை தமிழும் புகழும்
முருகனைப் போலே திகழும்
வண்ணக்கிளியை வயிற்றினில் சுமந்தாள்
பெண் : மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்
மூவகை தமிழும் புகழும்
முருகனைப் போலே திகழும்
வண்ணக்கிளியை வயிற்றினில் சுமந்தாள்
மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்….
பெண் : ஓரடி நடந்தா பெருமூச்சு வாங்குது
மயக்கம் உருவாச்சு
மசக்கையில் சோறு வெறுப்பாச்சு
புளிக்கிற மாங்காய் இனிப்பாச்சு
பெண் : அழகான முழு நிலவு முழுகாம இருக்குதம்மா
தான் வாழும் மறுவீடே தாய் வீடாய் நினைக்குதம்மா
நடக்கும் இங்கே வளைக்காப்பு
நாம்தான் கொடுப்போம் வரவேற்பு
பெண் : மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்
மூவகை தமிழும் புகழும்
முருகனைப் போலே திகழும்
வண்ணக்கிளியை வயிற்றினில் சுமந்தாள்
மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்….
குழு : ………………………..
பெண் : அண்ணியை பாரு புதுவனப்பு
ஆலய அம்மன் மறு பதிப்பு
புன்னகை பொன்னின் புது வார்ப்பு
புடவையில் நடக்கும் பூந்தோப்பு
பெண் : பூப்போலே தலைச்சன் பிள்ளை
பூமியிலே நடக்க வரும்
பொல்லாத பாட்டியத்தான்
பிரம்பாலே அடிக்க வரும்
மகன்தான் நாளை வரப்போறான்
வாழ்வில் வெளிச்சம் தரப்போறான்
பெண் : மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்
மூவகை தமிழும் புகழும்
முருகனைப் போலே திகழும்
வண்ணக்கிளியை வயிற்றினில் சுமந்தாள்
மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்….