பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : ஹேய் மாவாட்ட நானும் வரட்டா
ஏ சின்ன பொண்ணே பூவாட்டம் சுட்டுத் தரட்டா
ஹேய் மாவாட்ட நானும் வரட்டா
ஏ சின்ன பொண்ணே பூவாட்டம் சுட்டுத் தரட்டா
அடி பூ முடிச்சு பொட்டு வச்ச புள்ளே
நீ போய் சும்மா குந்திக்கடி உள்ளே
நா ஆட்டுக்கல்ல ஆட்டுறதில் சூரன்
அடி அதுக்கு தாண்டி மீச வச்ச வீரன்
குழு : அண்ணன் ஒரு……
ஆண் : கில்லாடி தான்
குழு : கண்டுக்குவேன்…….
ஆண் : பின்னாடி தான்
குழு : வச்சிடுவான்……….
ஆண் : சொக்குப் பொடி
குழு : வச்சா அது…….
ஆண் : நெத்தியடி……
ஹேய் மாவாட்ட நானும் வரட்டா
ஏ சின்ன பொண்ணே பூவாட்டம் சுட்டுத் தரட்டா
பெண் : ………………….
ஆண் : முன்னால தோப்பிருக்கு
முழுசாதான் காய்த்திருக்கு
பாரு தென்னை இளநீரு
அஞ்சாம ஏறி நின்னு அஞ்சாறு திருடி தின்னு
தாகம் எடுக்குற நேரம்
பெண் : ………………………..
ஆண் : கல்லால மாங்கா அடிப்போம்
ஹேய் கையால ஏந்திப் புடிப்போம்
ஆ .உப்போடு சேத்துக் கடிப்போம்
உல்லாசப் பாட்டுப் படிப்போம்
அடுத்தது நாம குளக்கரை போவோம்
அழகிகள் யாரும் குளிக்கிற நேரம்
ஆண் : போறாளே மஞ்சக் குளிக்க
ஏ பொண்ணுரங்கம் வாரேண்டி சேல துவைக்க
போறாளே மஞ்சக் குளிக்க
ஏ பொண்ணுரங்கம் வாரேண்டி சேல துவைக்க
நான் வேல வெட்டி ஏதும் இல்லா ஆளு
நீ வேண்டியத எங்கிட்ட தான் கேளு
அடி ஆழத்திலே எறங்குறியே மானே
ஒன் அங்கத்துல கடிச்சுப்புடும் மீனே
பெண் : ……………………………..
குழு : ………………………
ஆண் : பானையில நீர் எடுத்து பல்லாக்கு நட நடந்து
போறா சின்னப் பொண்ணு ஜோரா
அம்மாடி அன்ன நடை அசைந்தாடும் சின்ன இடை
பாத்தா அள்ளுதடி ஆத்தா
பாவாட கீழ பறக்க பூவோட மேல மணக்க
ஏ பாலாட மேனி நடக்க தாளாது ஆச அடக்க
குடம் என மாறி இடுப்புல நானும்
இணை பிரியாம இருந்திட வேணும்
குழு : …………………………..
ஆண் : ஆ ஊரெல்லாம் வட்டம் அடிப்போம்
ஏ மச்சிகளா நாளெல்லாம் கொட்டம் அடிப்போம்
ஊரெல்லாம் வட்டம் அடிப்போம்
ஏ மச்சிகளா நாளெல்லாம் கொட்டம் அடிப்போம்
அட இந்த ஊர் முழுக்க நாம் இருக்கும் எல்ல
நம்ம ஏன்னுன்னு தான் கேட்கிறவன் இல்ல
நம்ம காட்டுல தான் மழையடிக்கும் நேரம்
ஒரு கவலையில்ல கலக்கம் இல்ல நாளும்..
குழு : அண்ணன் ஒரு……
ஆண் : கில்லாடி தான்
குழு : கண்டுக்குவேன்…….
ஆண் : பின்னாடி தான்
குழு : வச்சிடுவான்……….
ஆண் : சொக்குப் பொடி
குழு : வச்சா அது…….
ஆண் : நெத்தியடி……
…………………………………………………………..