பாடகர் : எம். எம். மாரியப்பா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்
மறுமலர் மேவிய மாது போல் இம்மாலினி
மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்
மறுமலர் மேவிய மாது போல் இம்மாலினி
மா மயிலென நடமாடுறாள் இந்நாள்
ஆண் : {தோகை மகிழ்ந்தே ஆடுறாள்
நாகரீக நாட்டியம்
நேச பாவனை யாகவே
மோகனாங்கி போலவே} (2)
ஆண் : மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்
மறுமலர் மேவிய மாது போல் இம்மாலினி
மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்
ஆண் : பார் தாங்கிய சேடனார் போலவே
பார் தாங்கிய சேடனார் போலவே
பாவையாள் முன்னாலே ஆடுறாள் தன்னாலே
பாவையாள் முன்னாலே ஆடுறாள் தன்னாலே
பாடாமலின்னாலே பாங்கார் பூங்கொடி போலே
ஆர்வமாயென் நேரிலே
ஆண் : மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்
மறுமலர் மேவிய மாது போல் இம்மாலினி
மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்