பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மாலை நேரக் காற்றே
மெளனம் ராகம் ஏனோ….
உன் காதல் தோல்வி தானோ
உன் ஆசை யாவும் வீணோ
பெண் : மாலை நேரக் காற்றே
மெளனம் ராகம் ஏனோ……
பெண் : இசை பாடும் நேரம்
தாளம் மாறும் காலம்
இசை பாடும் நேரம்
தாளம் மாறும் காலம்
பெண் : துயரெனும் கடலினில்
இதயம் நீந்தும் நேரம்
மனம் என்னும் மலரிலே
முள்ளும் காயும் காலம்
பெண் : மாலை நேரக் காற்றே
மெளனம் ராகம் ஏனோ……
உன் காதல் தோல்வி தானோ
உன் ஆசை யாகம் வீணோ
பெண் : மாலை நேரக் காற்றே
பெண் : பெண் மான் சீதை போலே
பாவை நானே ஆனேன்
பெண் மான் சீதை போலே
பாவை நானே ஆனேன்
பெண் : நெருப்பிலே குளிக்கவே
ராமன் சொன்னான் அன்று
கதையிலே நடந்தது
எந்தன் வாழ்வில் உண்டு
பெண் : மாலை நேரக் காற்றே
மெளனம் ராகம் ஏனோ……
உன் காதல் தோல்வி தானோ
உன் ஆசை யாகம் வீணோ
பெண் : மாலை நேரக் காற்றே
மெளனம் ராகம் ஏனோ……