பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹான் ஆஅ….ஆஅ….ஆ….ஹா…ஆ….
பெண் : ஆத்தோரம் பூங்காத்து
அழகாக வீசும்
காத்தோடு இள நாத்து
கைகோத்து பேசும்
பெண் : தென்பாண்டி சிட்டுத்தான்
நானல்லவா
தெம்மாங்கு மெட்டுத்தான்
நான் பாடவா
பெண் : குயிலு குயிலு
இது காட்டுக் குயிலு
இதுதான் இதுதான்
உங்க வீட்டுக் குயிலு
பெண் : கிராமத்து குயிலோசை
கேட்டா என்ன
கேட்டுத்தான் கைத்தாளம்
போட்டா என்ன
வேறாரும் நாடாத
வேறார்க்கும் பாடாத…..
பெண் : குயிலு குயிலு
இது காட்டுக் குயிலு
இதுதான் இதுதான்
உங்க வீட்டுக் குயிலு
பெண் : பட்டில தொட்டில
வாய்க்கா வரப்பில
பாட்டு படிச்சவதான்
கூவித் திரியிற
நீலக் குயில்களை
கேட்டுப் படிச்சவதான்
பெண் : பட்டில தொட்டில
வாய்க்கா வரப்பில
பாட்டு படிச்சவதான்
கூவித் திரியிற
நீலக் குயில்களை
கேட்டுப் படிச்சவதான்
பெண் : நீதானே நான் பாடும்
பாட்டென்பது
நீங்காத ரீங்காரம் போலானது
நீதானே நான் பாடும்
பாட்டென்பது
நீங்காத ரீங்காரம் போலானது
பெண் : நல்ல நாதம்….ஆஅ….
நல்ல நாதம்…..நல்ல கீதம்
ஒண்ணா சேர்ந்தா நல்ல யோகம்
வேறாரும் நாடாத
வேறார்க்கும் பாடாத
பெண் : குயிலு குயிலு
இது காட்டுக் குயிலு
இதுதான் இதுதான்
உங்க வீட்டுக் குயிலு
பெண் : வெள்ளிக் கிழமையில்
அம்மன் சந்நதியில்
எண்ணை விளக்கேத்தி
உன்னை அடைஞ்சிட
வேண்டிக் கிடந்தேனே
வண்ண மலர் சாத்தி
பெண் : வெள்ளிக் கிழமையில்
அம்மன் சன்னதியில்
எண்ணெய் விளக்கேத்தி
உன்னை அடைஞ்சிட
வேண்டிக் கிடந்தேனே
வண்ண மலர் சாத்தி
பெண் : வெள்ளிக் கிழமையில்
அம்மன் சன்னதியில்
எண்ணெய் விளக்கேத்தி
உன்னை அடைஞ்சிட
வேண்டிக் கிடந்தேனே
வண்ண மலர் சாத்தி
பெண் : தாய் வீடு
மணமாலை சூடும் வரை
உன் வீடு என் கண்கள்
மூடும் வரை
பெண் : தாய் வீடு
மணமாலை சூடும் வரை
உன் வீடு என் கண்கள்
மூடும் வரை
பெண் : இன்னும் வாழும்
ஜென்மம் ஏழும்
பந்தம் உண்டு சொந்தம் உண்டு
வேறாரும் நாடாத
வேறார்க்கும் பாடாத
பெண் : குயிலு குயிலு
இது காட்டுக் குயிலு
இதுதான் இதுதான்
உங்க வீட்டுக் குயிலு