பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ
கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா …
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ …
ஓவியம் வரையவா
உன் கால் தடம் வரையவா …
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ …
ஆண் : யார் அந்த ரோஜாபூ
கண்ணாடி நெஞ்சின் மேல்
கல்வீசி சென்றாள் அவள் யாரோ …
ஆண் : {உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே …} (2)
ஆண் : ஹோ ஹோ ஹோ ஓ
காகிதத்தில் செய்த பூவுக்கும்
என மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆண் : பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ
இரண்டுமே வெளி வர முடியாதோ
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆண் : செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்கிறதே
ஆண் : ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ
ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ
ஆண் : ஹோ ஹோ ஹோ ஓ
உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
சுத்துதுமா இங்கு என் வாழ்வும்
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆண் : உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டுக்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும்
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆண் : பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நான்தானே
முகமே இல்லை என்னிடம் தான்
ஆண் : ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ
ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ
ஆண் : கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா …
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ …
ஓவியம் வரையவா
உன் கால் தடம் வரையவா …
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ …
ஆண் : யார் அந்த ரோஜாபூ
கண்ணாடி நெஞ்சின் மேல்
கல்வீசி சென்றாள் அவள் யாரோ …
ஆண் : {உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே …} (2)