பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓ……கஸ்தூரி மானே மானே
கண்ணீரில் நீந்தும் மீனே
ஊரெங்கும் தூங்கும் நேரம்
உன் கண்ணில் ஏனோ ஈரம்
கண்ணே உன் அன்னை
நானம்மா ஓ……
ஆண் : தாயே நீ கொஞ்சம் தூங்கம்மா
புது ரோஜா இனி வாடாதே
தந்தை மனம் தூங்காதே ஓ……
ஆண் : ஓ……கஸ்தூரி மானே மானே
கண்ணீரில் நீந்தும் மீனே
கண்ணே உன் அன்னை
நானம்மா ஓ…
கண்ணே உன் அன்னை
நானம்மா
ஆண் : ஆகாசப் பாதை ஓரம்
ஊர்கோலம் போகும் மேகம்
அம்மாவை தேடிப் போகுமா ஓ…..
ஆண் : அம்மாவை நேரில் பார்த்து
ஆராரோ ராகம் கேட்டு
தாலாட்டு நாளை பாடுமா
ஆண் : அந்த மேகம் வரும் பாட்டோடு
தோளில் நீ சாய்ந்தாடு ஓ……ஓ…
ஆண் : கஸ்தூரி மானே மானே
கண்ணீரில் நீந்தும் மீனே
கண்ணே உன் அன்னை
நானம்மா ஓ…..
கண்ணே உன் அன்னை
நானம்மா