பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : கடவுளுக்கே கண்ணில்லையோ
அதை கண்ணப்பர்தான் கொடுத்தாரோ
இங்கே கண்ணில்லா மனிதர்களை
அந்த கடவுள்தான் படைத்தாரா..
பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது
கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது
பெண் : வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது
ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது
கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது..
பெண் : முல்லைக்கொடி அலையுதென்று
தேரைத் தந்தான் பாரி
ஒரு புள்ளிமயில் குளிரில் வாட
போர்வை தந்தான் பேகன்
பெண் : நீங்கள் கூட வள்ளல்தானே
என்ன செய்ய வேண்டும்
இங்கே இருளில் வாழும் மக்களுக்கு
ஒளியை வழங்க வேண்டும்
கண் ஒளியை வழங்க வேண்டும்…ஆஆஆஆ….
பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது
வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது
ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது
பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது..
பெண் : விழி ஒருவருக்கில்லை என்ற
பழியை முதலில் துடைப்போம்
புது விஞ்ஞான கூடம் ஒன்று
விண்வெளியில் அமைப்போம்
பெண் : எல்லோரும் பார்வை பெற்று
இன்பக் கடலில் குளிப்போம்
இங்கே குருடர் யாருமில்லை என்று
புதிய உலகம் படைப்போம்
புரட்சி வழியில் நடப்போம்..ஆஆஆ…