பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான் வர்மா
பெண் : கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா
சாமி நம்ம பொங்க வைக்கும்
எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும்
பெண் : ஹேய்..
கல்யாண…..திருக் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
குழு : கல்யாண…..ஹோய் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
பெண் : கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா
சாமி நம்ம பொங்க வைக்கும்
எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும்
பெண் : கல்யாண…..திருக் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
குழு : கல்யாண….திருக்கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
பெண் : தாலிக் கட்டும்போதே
நீ தலை சாய்ச்சு பாத்துக்கோ
தாலிக் கட்டும்போதே…..ஹேய்
தாலிக் கட்டும்போதே
நீ தலை சாய்ச்சு பாத்துக்கோ
கட்டிலுக்கு மேலே நீ கணக்கொண்ணு போட்டுக்கோ
பெண் : ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல
அன்புக்குத்தான் வஞ்சமில்ல
பெண் : வரும் நாளெல்லாம் திருநாளாய் மாறும்
மச்சான…..உன் …மச்சான தொட்டுத் தொட்டு
தினம் மஞ்சத்தில் ஜல்லிக்கட்டு
குழு : மச்சான…..உன் …மச்சான தொட்டுத் தொட்டு
தினம் மஞ்சத்தில் ஜல்லிக்கட்டு..
குழு : ஹோ ஹோ ஹோ லாலாலா…(2)
பெண் : மாசம் பத்து மாசம்
அட மறுபடியும் வாந்திதான்
மாசம் பத்து மாசம்…..ஹ்ஹ்ஹ்ஹ
மாசம் பத்து மாசம்
அட மறுபடியும் வாந்திதான்
மல்லியப்பூ போட்டு அட தெனம் தெனம் சாந்திதான்
பெண் : வருஷம் ஒரு புள்ள பெத்து ஹோய்..
வளத்து வைக்க ஆசை உண்டு
நம்ம அரசாங்கம் இப்ப போட்டது போடு
பெண் : ஒண்ணோட..
பெண் : ஆங்…
பெண் : அட ஒண்ணோட நிறுத்திக்கணும்
அடி நீ கொஞ்சம் பொறுத்துக்கணும்
குழு : ஒண்ணோட..அட ஒண்ணோட நிறுத்திக்கணும்
அடி நீ கொஞ்சம் பொறுத்துக்கணும்…
பெண் : கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா
சாமி நம்ம பொங்க வைக்கும்
எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும்
பெண் : கல்யாண…..திருக் கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
குழு : கல்யாண ஹோய் கல்யாண…..நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி
கல்யாண…..திருக்கல்யாண நாளை எண்ணி
தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி….