இசையமைப்பாளர் : கார்த்திக்
பெண் : கண்ணே நான் உன் கண்ணாடி
உன்னக் காட்டுற கண்ணாடி
சந்தோசம் என் சந்தோசம்
எங்க வீசுன தாயீ…..
பெண் : கண்ணே நான் உன் கண்ணாடி
நீ மையத் தீட்டுற கண்ணாடி
கண்ணீர உன் கண்ணீர
என்னப் பண்ணுவேன் தாயீ
பெண் : மறுக்கா பூத்திட சிரிப்ப பாத்திட
கிழக்கும் காங்கல கண்ணே….
இடிஞ்சு நீ அழ உடைஞ்சு நான் விழ
தரையும் காங்கல கண்ணே…..
பெண் : கண்ணே நான் உன் கண்ணாடி
உன்னக் காட்டுற கண்ணாடி
சந்தோசம் என் சந்தோசம்
எங்க வீசுன தாயீ…..
பெண் : கண்ணே அழுகைய திங்காதே
நீயும் தீக்குற திங்காதே….
காயத்த இந்த காயத்த
எத்தால் தீப்பேன் தாயீ…
பெண் : காத்த காதுல சொல்லாத
காயம் ஆச்சுனு சொல்லாத
ஊரெல்லாம் இங்க பொல்லாத
பேய்க வாழுது தாயீ…
பெண் : ஒருநாள் மாறிடும் ரணமும் ஆறிடும்
மறக்கப் பாரடி பொண்ணே….
எனையத் தேத்தவே வழிய காங்கல
உனையத் தேத்துறன் கண்ணே….