பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன்தான் உன் கன்னமோ
பெண் : கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
பெண் : {அருவியைப்போல் தவழுந்து வரும்
இளநடை தென்றல் எனும் மாமன் தந்ததோ
பனி இதழ்கள் மடல் விரிக்கும் குளிர்நகை
திங்கள் என்னும் அத்தை தந்ததோ} (2)
ஆண் : பம் சிக்க பம் சிக்க பம் யா
பம் சிக்க பம் சிக்க பம்
பெண் : சொல்லு காலை வணக்கம் குட் மார்னிங்
நாளும் வணங்குவது மிக நல்ல வழக்கமது
இன்று ஆறில் வந்த பழக்கம்தானே நூறில் வருவது
கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன்தான் உன் கன்னமோ
பெண் : கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
பெண் : {அழகு தமிழ் அகர முதல
எழுதுக கண்ணே உந்தன் அன்னை மகிழவே
அறிவுலகம் உன்னை புகழும்
பெருமைகள் அன்றும் இன்றும் என்றும் வளரவே} (2)
பெண் : கற்று தெளிந்தவர்க்கு
நல்ல கல்வி அறிந்தவர்க்கு
எதிர்காலம் இருக்கு
உச்சி முகர்ந்திடவோ உன்னை அணைத்திடவோ
பட்டுக் கிளியைப்போல பறந்து வந்த
பிள்ளைக் கனியமுதோ
பெண் : கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன்தான் உன் கன்னமோ
பெண் : கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா