பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் மாளவிகா
இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்
ஆண் : கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு
பெண் : சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்லை கட்டுப் பாடு
கிட்ட வந்தா ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல மூடு
ஆண் : அடி கியூட்டி கட்டி பூட்டி
ஒரு சாட்டை சுழட்டி
நான் கேக்கவா
அப்போ கூட கேக்காட்டி
உன் காலில் நான் விழவா
பெண் : கால தொட்டு மேல தொட்டு
நீ என்ன பண்ணுவேன்னு சொல்லுடா
இதழ் பட்டு பவர் கட்டு
இருட்டோடு உருட்டாதடா
ஆண் : ஹே கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு
பெண் : சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்லை கட்டுப் பாடு
கிட்ட வந்தா ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல மூடு
ஆண் : ஹே ஆடையை மாற்றிடும்
முன்னம்மே
மேடையில் நாடகம் அன்னமே
பெண் : போதை கிடைக்கும் முன்ன
என்னை குடிப்பதென்ன
ஆண் : உன் விழிய குடிச்சா இதயம்
வேற எதையும் விரும்பாதே
கண்ண மட்டும் காட்டு பெண்ணே
வேற பக்கம் திரும்பாதே
பெண் : நான் நோ னா அட வேணாம்
இல்லை உள்ள தூக்கி போடுவேன்
நீ கெஞ்சி கேட்டேனா
நான் கொஞ்சம் திண்டாடுவேன்
ஆண் : நீ போன போவேனா
உன் டாபர்மேனா நானா சொல்லடி
நீ நோ னா செய்வேனா
அந்த சூப்பர்மேன் நானடி
ஆண் : ஹே கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு
பெண் : சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்லை கட்டுப் பாடு
கிட்ட வந்தா ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல மூடு
பெண் : ஹே நான் உந்தன்
காமத்தின் தேவையா
நீ விளையாடிடும் பொம்மையா
ஆண் : சாவி கொடுக்கும் முன்ன
உசுரு மொளைச்சதென்ன
பெண் : சாவிய நீ எடுக்கும் போதே
பாவி என்னை நீ தீ வெச்ச
கே வி ஆனந்த் மூவிய போல
சாங்கு இப்போ ஏன் வச்ச
ஆண் : அடி பியூட்டி என் பியூட்டி
இது வெக்கம் தகுவான போட்டி டி
அது ஏன்னு இது ஏன்னு
நீ லாஜிக் பார்க்காதடி
பெண் : அட மாமா என் மாமா
என் மோக தீயில் நீ வேகுற
உன்னை சூர்யா பாட்ட கேட்ட
எஸ் ஜே சூர்யா ஆகுற