ஆ : கண்மணி நில்லு காரணம் சொல்லு
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
நடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்
காதலை மறுத்தால் நியாயமா
கண்களின் வளர்ந்த காதலை நீயும்
கலைத்திட நினைத்தால் மாறுமா
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து
தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்
மலர்ச்சரம் தெரித்து மலர்வளை தொடுத்து
ஏழை என் காதலை நீ புதைத்தாய்
புதைத்தது மீண்டும் மலராகும்
உன் பூஜையை நினைத்தே சரமாகும்
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
இதயத்தில் தோன்றும் காதல் நிலவே
உதயத்தை நீ ஏன் மறந்துவிட்டாய்
உதயத்தை மறுத்து இதயத்தை வெறுத்து
உயிரின்றி எனை ஏன் வாழ விட்டாய்
காதலின் விதியே இதுவானால்
கல்லறை தானே முடிவாகும்
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
பெ : கண்மணி நெஞ்சம் கலங்கிய நேரம்
காதல் நினைவும் மாறுமா
கோபத்தில் ஊடல் செய்த நெஞ்சம்
கல்லறை முடிவை தாங்குமா
காதலை வென்ற காதலன் உயிரை
பிரிந்தால் இனியும் வாழுமா
ம்ம் ம் ம்ம் ம் ம்ம் ம் ம்ம்
ஆ/பெ: லால லால லால லா
லால லால லால லா
லால லால லால லா
லால லால லால லா
லால லால லால லா