பாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ருருரு ருத்துரூ ருருரு ருத்துரூ
ருருரு ருத்துரூ ரூரூரூ
ருருரு ருத்துரூ ருருரு ருத்துரூ
ருருரு ருத்துரூ ரூரூரூரூ
ஆண் : கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே
பெண் : பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே
ஆண் : ராத்திரி சிறு பூத்திரி இன்று ஏத்தலாமடி
பெண் : மேனிதான் மணி வீணைதான்
இதை மீட்டலாம் இனி
ஆண் : விடுமோ விடுமோ ஆசை
வாராதோ வளையோசை
குழு : விடுமோ விடுமோ ஆசை
வாராதோ வளையோசை
ஆண் : கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே
பெண் : பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே ஹோ
குழு : மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபகே
த்வம் ஜீவ சரதஸ்யதம்
த்வம் ஜீவ சரதஸ்யதம்
த்வம் ஜீவ சரதஸ்யதம்
குழு : லாலிலாலி லாலி லாலிலாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
ஆண் : ஆடையில் மூடி வைத்த அட்சய பாத்திரம்
நான் தொடும் வேளை எல்லாம்
தேன் துளி வார்த்திடும்
பெண் : தேன் துளி நான் கொடுத்தல்
தீர்ந்திடும் ஆத்திரம்
வேகமாய் நீ எடுத்தால் வாடுமே பூச்சரம்
ஆண் : காவிரி ஓடி வந்து கல்லணை சேர்ந்ததா
பெண் : மோகனம் பாடி வந்து மார்பினில் சாய்ந்ததா
குழு : ……………………………….
ஆண் : கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே
பெண் : பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே
பெண் : நூலிடை நீ படிக்கும் நூலகம் ஆனது
நால் வகை நாணம் எல்லாம் நீங்கியே போனது
ஆண் : பார்வைகள் பாய் விரித்து பல்லவி பாடுது
வேர்வைகள் தேகம் எங்கும் வெள்ளமாய் ஓடுது
பெண் : காதலில் நீ அறிந்த சோதனை ஆயிரம்
ஆண் : சோதனை யாவும் இங்கு சாதனை ஆகிடும்
குழு : …………………..
ஆண் : கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே
பெண் : பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே
ஆண் : ராத்திரி சிறு பூத்திரி இன்று ஏத்தலாமடி
பெண் : மேனிதான் மணி வீணைதான்
இதை மீட்டலாம் இனி
ஆண் : விடுமோ விடுமோ ஆசை
வாராதோ வளையோசை
குழு : விடுமோ விடுமோ ஆசை
வாராதோ வளையோசை
ஆண் : கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி
என் விழி பூத்தது உன்னாலே
பெண் : பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி
உன் மடி சேர்ந்தது தன்னாலே ஹோ