பாடகர்கள் : நஜீம் அர்ஷத் மற்றும் மிருதுளா வாரியர்
இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்
ஆண் : காதல் கொல்லுதடிப் பெண்ணே
நெஞ்சை சொல்லிவிடு முன்னே
பெண் : காதல் சொல்லும் எந்தன் கண்ணே
இங்கே தோன்றிடு முன்னே
ஆண் : காற்றாய் வருவேன்
சுவாசத்தில் நானே தானே
பெண் : சுவாசம் நீயே
இதயம் துடிக்கும் தானே
ஆண் : விழி முட்டும் நீர்தானே
என்றும் இங்கே
பரிசெனவேக் கொடுத்திடும் காதல்
என் காதல் வலியே தருதே
ஆண் : காதல் கொல்லுதடிப் பெண்ணே
நெஞ்சே சொல்லிவிடு முன்னே
பெண் : ஹோ ..
காதல் சொல்லும் எந்தன் கண்ணே
இங்கே தோன்றிடு முன்னே
ஆண் : போர்க்களம் என் நெஞ்சோரத்தில்
பெண் : பூ பூக்கும் மணிமாடத்தில்
ஆண் : தனிமை வாலாய்
மனதைக் கொல்லுதே
பெண் : ஒரு பார்வை மருந்தாக
தருவேனே வலிபோக நான்..ஆஆ….
ஆண் : உயிரை உயிலாய்
உனக்கே நான் எழுத
ஆண் : காதல் கொல்லுதடிப் பெண்ணே
நெஞ்சே சொல்லிவிடு முன்னே
பெண் : ஹோ..ஓ…
காதல் சொல்லும் எந்தன் கண்ணே
இங்கே தோன்றிடு முன்னே
பெண் : கால் நோக நான் தேடினேன்
ஆண் : கை சேர…நான் ஏங்கினேன்
பெண் : இனி நீ நான் தான்
நாமாய் மாறுமே
ஆண் : ஒரு வார்த்தை அதைக்கேட்க
வருவேனே உயிர் மீட்க நான்..ஆஆ…
பெண் : உயிரை உயிலாய்
உனக்கே நான் எழுத
ஆண் : காதல் கொல்லுதடிப் பெண்ணே
நெஞ்சே சொல்லிவிடு முன்னே
பெண் : காதல் சொல்லும் எந்தன் கண்ணே
இங்கே தோன்றிடு முன்னே
ஆண் : காற்றாய் வருவேன்
சுவாசத்தில் நானே தானே
பெண் : சுவாசம் நீயே
இதயம் துடிக்கும் தானே
ஆண் : விழி முட்டும் நீர்தானே
என்றும் இங்கே
பரிசெனவேக் கொடுத்திடும் காதல்
என் காதல் வலியே தருதே
ஆண் : காதல் கொல்லுதடிப் பெண்ணே
நெஞ்சே சொல்லிவிடு முன்னே
பெண் : காதல் சொல்லும் எந்தன் கண்ணே
இங்கே தோன்றிடு முன்னே