பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு
காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு
அடி பச்சப்பசேலென்று நஞ்சக் காடு புஞ்சக் காடு
பொன் விளையும் நல்ல பண்ணக் காடுதான்
அடி அக்கம் பக்கம் வண்ண தென்னஞ்சோலை புன்னஞ்சோலை
நிக்கிது பார் இது நம்ம ஊருதான்
காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு..ஹே
ஆண் : மடையில் மணி வாத்து நீந்தும்
துணையை எதிர்ப்பார்த்து நீந்தும்
கிளையில் இளம் மூங்கில் ஆடும்
அதன் மேல் கிளி ஊஞ்சல் ஆடும்
ஆண் : செங்கழனி சேத்துலதான்
சின்னஞ்சிறு நாத்து வரும்
அடி சின்னஞ்சிறு நாத்தோடுதான்
சேதி சொல்ல காத்து வரும்
ஆண் : செங்கழனி சேத்துலதான்
சின்னஞ்சிறு நாத்து வரும்
அடி சின்னஞ்சிறு நாத்தோடுதான்
சேதி சொல்ல காத்து வரும்
ஆண் : ஆஹா கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
என்னென்ன இன்பம்தான்
உள்ளபடி இந்த ஊரப் போல ஊருமில்ல
சொல்லப் போனா இந்த
மண்ணப் போல மண்ணுமில்ல
காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு…ஹு
ஆண் : நெலம்தான் இங்கு வானம் பாத்தா
தரிசா நின்னு வாடி வேர்த்தா
தருவா மழை மாரியாத்தா
அவள் இங்கு யாரு காத்தா
ஆண் : பொங்க வச்சு பூஜ வச்சு
பம்ப தட்டும் ஓசை வர
அட கும்பிட்டதும் கூப்பிட்டதும்
தாயிருக்கா ஓடி வர
ஆண் : பொங்க வச்சு பூஜ வச்சு
பம்ப தட்டும் ஓசை வர
அட கும்பிட்டதும் கூப்பிட்டதும்
தாயிருக்கா ஓடி வர
ஆண் : ஆஹா அந்நாளும் இந்நாளும்
எந்நாளும் கும்மாளம்
எப்பவுமே நல்ல நேரம் காலம் வாய்ச்சிருக்கு
நட்டதெல்லாம் நல்ல பூவும் பிஞ்சா காய்ச்சிருக்கு
ஆண் : காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு
காவலுக்கு சாமி உண்டு கஞ்சி ஊத்த பூமி உண்டு
அடி பச்சப்பசேலென்று நஞ்சக் காடு புஞ்சக் காடு
பொன் விளையும் நல்ல பண்ணக் காடுதான்
அடி அக்கம் பக்கம் வண்ண
தென்னஞ்சோலை புன்னஞ்சோலை
நிக்கிது பார் இது நம்ம ஊருதான்….