பாடகர்கள் : டி . எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : காலை நேரம் ஒருவன் வந்தான்
கட்டிப்பிடித்தான் முத்தம் கொடுத்தான்
ஆண் : ஹாங்… யாரவன்?
பெண் : காலை நேரம் ஒருவன் வந்தான்
கட்டிப்பிடித்தான் ஹோ ஹோய் முத்தம் கொடுத்தான்
ம்ம்ம் கதிரவன்
ஆண் : மாலை நேரம் ஒருத்தி வந்தாள்
மையல் கொடுத்தாள் கையில் அணைத்தாள்
மாலை நேரம் ஒருத்தி வந்தாள்
மையல் கொடுத்தாள் கையில் அணைத்தாள்
பெண் : ஓஹோ யாரவள்..
ஆண் : தென்றல்
ஆண் : தொட்டவுடன் நடுக்கமோ தீராத மயக்கமோ
தொட்டவுடன் நடுக்கமோ தீராத மயக்கமோ
பட்டு உடல் சிவந்ததோ பக்குவமாய் நடந்ததோ
பெண் : வந்த சுகம் கசக்குமோ வாலிபம் நிலைக்குமோ
வந்த சுகம் கசக்குமோ வாலிபம் நிலைக்குமோ
இந்த மனம் மறுக்குமோ
இன்னும் கொஞ்சம் கிடைக்குமோ ஹோய்
பெண் : ……………………..
ஆண் : …………………………..
ஆண் : மாலை நேரம் ஒருத்தி வந்தாள்
மையல் கொடுத்தாள் கையில் அணைத்தாள்
ஆண் : கொடியை வளைக்கவா கனியைப் பறிக்கவா…
பெண் : ………………..
ஆண் : கொடியை வளைக்கவா கனியைப் பறிக்கவா…
மடியை நிறைக்கவா மனம் போல் சுவைக்கவா…
பெண் : கண்ணிரண்டில் நாடகமோ கண்ணன் என்ற ஞாபகமோ
கண்ணிரண்டில் நாடகமோ கண்ணன் என்ற ஞாபகமோ
உன் மனதில் அழகிருந்தால்
உருவத்தில் வேண்டாமோ… ஹோய்
பெண் : காலை நேரம் ஒருவன் வந்தான்
கட்டிப்பிடித்தான் ஹோ ஹோய் முத்தம் கொடுத்தான்