கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
சின்னச் சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே
அமைதி கொள்ளடா
சின்னச் சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே
அமைதி கொள்ளடா
ஒரு பொழுதில் இன்பம் வரும்
மறு பொழுதில் துன்பம் வரும்
இருளினிலும் வழி தெரியும்
ஏக்கம் ஏனடா
தம்பி தூக்கம் கொள்ளடா
தம்பி தூக்கம் கொள்ளடா
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
ஆஆஆஆஆஆ
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்
துணையிருந்த தெய்வம்
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்
துணையிருந்த தெய்வம்
நெல்லுக்குள்ளே மணியை
நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
உனக்கு இல்லையாதம்பி
நமக்கு இல்லையா
தம்பி நமக்கு இல்லையா
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா