காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பக்குவமா பதிலே இங்கே கூறடி பொண்ணே (காடு)
மாடப்புறாப் போலே ஒரு கன்னி வந்தாளா
மாப்பிள்ளைய மனசுக்குள்ளே எண்ணி வந்தாளா
ஆடி மாச வெள்ளம் போலே ஆடி வந்தாளம் - வந்து
ஆசையெல்லாம் கண்ணுக்குள்ளே மூடி வச்சாளா (காடு)
எட்டாத தூரம் என்று ஏங்கி விட்டாளா
ஏழையென்று வீட்டுக்குள்ளே தங்கி விட்டாளா
தொட்டது போல் ராத்திரி வேளே கனவு கண்டாளா
தூக்கத்திலே யாரிடமும் உளறி விட்டாளா (காடு)
கல்யாண மாப்பிள்ள பொண்ணு போகுது பாரு
காதல் தந்த கவலை எல்லாம் தீருது பாரு
பொல்லாத மாமன் மனசு மாறுது பாரு
பூப்போல பெண்ணுக்கு வாழ்வு வருது பாரு (காடு)